பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 33

பாசுரம் பாடிக் கொடுத்தருளிய செய்தியையும் கல்லாடத்தில் 13-ம் செய்யுளாக அமைந்த அகவல் விரித்துக் கூறு கின்றது. எனவே கல்லாடம் என்னும் இந்நூல் சுந்தர

设 以 * * * * 卒 - x * மூர்த்தி சுவாமிகள் காலத்திற்குப் பின் தோன்றிய தென்பது நன்கு தெளியப்படும். இந்நூல் சொல் நடையாலும் பொருளமைதியாலும் கி. பி. பத்தாம் நூற்ருண்டளவில் இயற்றப்பட்டதென்பது இதனை புற்றுனர்வார்க்கு இனிது

வாங்கம். හීබෲ ද් ! காண்டு மாணிக்கவாசகர் காலம் வி ஆகவே இது கொ ត្រៅ 孺”密邸落”总部 Q}盘愈 தேவார ஆசிரியர்களுக்கு முற்பட்டதெனத் துணிதல் ஏற்புடையதன்ரும்.

இனி, மாணிக்கவாசகர் புத்தரொடு வாது நிகழ்த்திய நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால் தமிழ் நாட்டில் புத்த சமயம் தலை யெடுத்த காலமாகிய கி. பி. ஐந்தாம் நூற்ருண் டிற்கு முந்தியே திருவாதவூரடிகள் வாழ்ந்திருத்தல் வேண்டு மென்பர் மறைமலையடிகள். திருவாதவூரடிகளுடன் வாதஞ் செய்தவர்கள் தமிழ் நாட்டவர்களல்லரென்பதும் தமிழ் நாட் டில் சைவ சமயம் சிறப்புற்றிருந்த நிலையில் அச்சமயத்தின் கொள்கைகள் ஏற்புடையன அல்ல என வாதித்துத் தம் சம யத்தைப் பரப்புங் கருத்துடன் ஈழநாட்டிலிருந்து வந்தவர்க ளென்பதும் வாதவூரடிகள் வரலாற்றில் நன்கு விளக்கப் பெற்றுள்ளன. எனவே வாதவூரடிகள் காலத்தை நிச்சயித் தற்குப் புத்தசை வாதில் வென்ற இந்நிகழ்ச்சியை ஆதார மாகக் கொள்ளுதல் பொருந்தாது.

இதுகாறும் ஆராய்ந்த குறிப்புக்களால் மாணிக்கவாசகர் தேவார ஆசிரியர் மூவர்க்கும் முற்பட்டவரென்பார் கூறுங் காரணங்கள் நடுநிலையாளர்களால் ஏற்கத்தக்கன அல்ல வெனக் கண்டோம். இனி மாணிக்கவாசகர் தேவார ஆசிரி யர் மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்டவ ரென்பதற்குரிய கார ணங்களைக் காண்போம்.

  • பரிபுரக் கம்பலை யிருசெவியுண்ணும்

குடச்கோச் சேரன் கிடைத்திது காண்கென மதிமலிபுரிசைத் திரு முகங்கடறி அன்புருத் தரித்த இன் பிசைப் பாணன் பெற நிதி கொடுக்கென வுறவிடுத்தருளிய மாதவர் வழுத்துங் கூடற் கிறைவன் ”

- கல்லாடம் 13-ம் செய்யுள் 25 - 30 வரிகள்.