பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 129

நினைந்து உருகவேண்டுமானல், உள்ளங்கால்முதல் உச்சந் தலை வரையுள்ள என் உடம்பின் உட்பகுதியனைத்தும் நினைந்துருகுமியல்பினதாகிய நெஞ்சமாக அமையப்பெறு தல் வேண்டும். அத்தகைய நெஞ்சத்தின் கசிவாகிய அன் புடைமையினே யான் புலப்படுத்தவேண்டுமானுல் உடம்பின் வெளிப்புறமெல்லாம் கண்களாக அமைந்து கண்ணிர் சொரியப்பெறுதல் வேண்டும். ஆனல், யான் பெற்றுள்ள அணுவளவிற்ருகிய சிறிய நெஞ்சமும் வல்லென்ற கல்லின் தன்மை உடையதாதலின் உருகப் பெருதாயிற்று. தீவினை யேனுகிய எனக்குக் கிடைத்துள்ள இருகண்களுங்கூட அன்புநீர் சொரியும் தன்மையின்றி மரக்கண்களைப் போன்று உணர்ச்சியற்றனவாயின. ’ என்பது இத் திருப்பாட்டின் பொருளாகும்.

சுட்டுணர்வுக்கு எட்டா இயல்பினளுகிய இறைவனது அருமையையும், அரியதில் அரிய அம்முதல்வன் மருவிய கருணைமலையாய் வெளிப்பட்டு ஐம்புலன்கள் ஆர ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளிவந்து அருள் புரிந்த எளிமைத் திறத்தையும், உயிராகியதாம், சுட்டுணர்வுடைய உலகம் போன்று அசத்தாகவோ சுட்டுணர்வுக்கு எட்டாத முதல்வனைப் போன்று சத்தாகவோ அமையாது, சத்தும் அசத்தும் ஆகிய அவ்விரண்டின்பாற்படாது தனித்துள்ள எளிமை நிலையையும்,

வண்ணந்தான் சேயதன்று, வெளிதேயன்று,

அநேகன், ஏகன், அனு, அணுவிலிறந்தாய் என்று அங்கு எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறறியாத எந்தாய் ! உன்றன் வண்ணந்தான் அதுகாட்டி வடிவுகாட்டி

மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற்றேனேத் திண்னந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்

எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே ' எனவும்,

" சிந்தனை நின் றனக்காக்கி நாயினேன் றன்

கண் ணிணை நின் திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்

மணிவார்த்தைக் காக்கி ஐம்புலன்களார வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை

மாலமு தப் பெருங்கடலே மலேயேயுன்னைத் தந்தனை செந்தாமரைக் காடனே யமேணித்

தனிச்சுடரே இரண்டுமிலித்தனியே னேற்கே '