பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

3{} பன்னிரு திருமுறை வரலாறு

எனவும் வரும் திருப்பாடல்களில் அடிகள் தெளிவாகக் குறித்துள்ளமை அறியத்தக்கதாகும். ' சத்தும் அசத்தும் ஆகிய இரண்டினையும் அறியுந்தன்மைத்தாய், அறிவிக்க அறிவதாகிய உபதேசியாய், நிலைபெற்ற சத்து, அசத்து இரண்டன்பாலும் அதுபவ அறிவுள்ளதாயுள்ள அதுவே சத்தும் அசத்தும் அல்லாத சதசத்தாகிய ஆன்மா”

என்பர். ஆன்மாவுக்குரிய இவ்வியல்பினை இரண்டு

w

  1. த் # னன் ' என் தொடரில் டிகள் ; ! கச் மிலித்தனியே ற தொடரி 후 தெளிவாகச் சுட் ள்ளமை காணலாம். இவ்வாறே ஆசிரியர் மெய்கண்ட சுடடி } କ୍ଷି) இ றே ஆசிரியர் மெய்கண்

- 8 இருதிறன் திவுளது இரண்ட * o தேவரும் இருதி $ 荔” இரண்டலா ஆன்மா என ஆன்மாவுக்கரிய சிறப்பிலக்கணம் உணர்த்தியுள்ளார்.

மாவு 蔚 சிற பில ாதத §

இரண்டு மிலித்தனியனேன்’ என்ற திருவாசகத் தொடரை அடியொற்றி யமைந்ததே இரண்டலா ஆன்மா' எனவரும் சிவஞானபோதத் தொடராகும்.”

& ஆடுகின்றிலை எனத் தொடங்கும் நான்காம் பதிகம் ஆத்தும சுத்தி என்னும் தலைப்பில் அமைந்ததாகும். ஆன்ம சுத்தியாவது, உயிர், பாச ஞானத்தாலும் பசு ஞானத் தாலும் அறியப்படாத முதல்வனே அவனருளிய சிவஞானத் தாலே தன்னறிவின் கண்ணே நாடிக்கண்டு அம்முதல்வன் அருள்வழி அடங்கி நிற்றலால் மனமாக நீங்கித் தூய்மை பெறுதல். ஆன்மசுத்தி யென்பதற்கு அனுபவத்தழுந்தல் என முன்னுேர் கருத்துரைப்பர். பதிஞானத்தாற் சிவபரம் பொருளேக்கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு அவ் விறைவன் செய்த பேரருளே நினைந்து அவனடிக்கு அன் புடையராய் ஆடுதல், என்புருகிப்பாடுதல், பாதமலர் சூடுதல் ஆகியவற்றை மேற்கொண்டு அவனருளில் அழுந்துதலே உயிர்கள் தூய்மை பெறுதற்குரிய நெறிமுறை என்பதனை,

ஆர்.

ஆடுகின்றிலே கூத்துடை யான் கழற் கன்பிலே யென் புருகிப் பாடுகின்றிலே ப ைதப்பதுஞ் செய்கிலே பணிகிலே பாதகலர்

சூடுகின் றின் சூட்டுகின்றதுமிலை துனையிலி பின நெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோ றலறிலே செய்வதொன் நியேனே.

என இப்பதிகத்தின் முதற்பாடலில் அடிகள் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தியிருத்தல் அறியத்தக்கதாகும். இங்கனம் இறைவனை நினைந்து போற்று முகத்தால் நெஞ்சந்தூய்மை

1. சிவஞானபாடியம், ஏழாஞ்சூத்திரம் 3-ஆம் அதிகாசம்.

2. சிவஞானபோதம், ஏழசஞ் சூத்திரம்.