பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பன்னிரு திருமுறை வரலாறு


குரிய பெயராதல் புலளும். நறுமணப்பொடிகளில் பொன் னிறச் சுண்ணமே சிறப்புடையதாகும்.

பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் ” எனச் சிறுபாணுற்றுப்படையிற் பொன்னிறச் சுண்ணமே சிறந்தெடுத்துக் கூறப்பெற்றிருத்தல் காணலாம். பண்டைக் காலத்தில் உடற்பூச்சுக்கேற்ற நறுமணப் பொடியினை நன் முறையில் இடித்தமைக்கும் பயிற்சியின மகளிரே மேற் கொண்டிருந்தனரென்பது,

'பலர் தொகு பிடித்த தாதுகு சுண் ணத்தர் ' எனவரும் மதுரைக்காஞ்சித் தொடரால் இனிது விளங்கும். இங்ங்னம் உடற்பூச்சுச்குரிய மணப்பொடியினை இடித்தமைக் குந் தொழிலில் ஈடுபட்ட மகளிரது உள்ளம் அந்நறுமணத் தின் தொடர்பால் மகிழ்ச்சி நிலையினை எய்துதல் இயல்பாகும். இங்ங்னமாகத் திருக்கோயிலில் இறைவனது திருமஞ்சனத் திற்குரிய நறுமணப்பொடியினை இடிக்குந் திருப்பணியில் ஈடு பட்ட மகளிரது உள்ளமோ வையத்து வாழ்வினை மறந்து இறைவன் திருவருளாகிய தெய்வ மணத்தில் ஒன்றித் திளைக்கும் பெரு மகிழ்ச்சியைத் தலைப்படுதல் இயல்பாகும். எனவே திருப்பொற்கண்ணமிடிக்கும் இளமகளிரது உரை யாடலாக அமைந்த இப்பனுவலுக்கு ஆனந்த மனுேலயம் என முன்னேர் கருத்துரை கூறினர்.

நாம் பெற்றுள்ள உடல், கருவி, உலகு, நுகர் பொருள் ஆகிய இவை யாவும் தம்பாலுள்ள வாலாமை நீங்கித் தூயன வாய் இறைவனது திருமெய்ப்பூச்சுக்கு ஏற்ற இனிய நறு மணப் பொடியாய் நுணுகும்படி அவற்றை மாற்றியமைத் தருளும் வண்ணம் அருட்சத்திகளை அழைப்பது இத்திருப் பொற்சுண்ணத்தின் உட்கிடை என்பர் பெரியோர், இந் துட்பம், -

" சத்திகளாற் றனுகரண புவனபோ கங்கள் தமை

அத்தனுக்குச் சுண்ணமவை யாயிடிக்கக் கூவுதலே ஒத்ததிருச் சுண்ணம் ” எனவரும் திருவாசக உண்மையால் இனிது புலளுதல் காணலாம்.

மகளிர் உலக்கை கொண்டு நறுமணப்பொடியினை இடிக் கும் நிலையிற் பாடுவதாக அமைந்த இப்பனுவல், சிலப்பதி