பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பன்னிரு திருமுறை வரலாறு


கொய்வோமாக என அன்புடையாரை அழைக்கும் முறை

யில் அமைந்தது.

வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம் பெருமான் அனங்கொ டணி தில்லை யம்பலத்தே யாடுகின்ற குனங்கூரப் பாடி நாம் பூவல்லி கொய்யா மோ.

என்ற திருப்பாடலாகும். இது,

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் து வித் துதியாதே வீழ்த்தவா வினேயே னெடுங்காலமே (3 - 90 - :) எனவரும் அப்பர் அருளுரையினை ஒத்து அமைந்திருத்தல் நோக்கத்தக்கதாகும்.

இறைவன், என் உடலிடங்கொண்டு என்னுள்ளத்தே புகுந்தருளி என்னே ஆட்கொண்டருளினனுகவும், பெருந் தேவராகிய மாலயன் முதலியோர், உயிர்க்குயிராய் உள்

நின்று அருள்புரியும் அம்முதல்வனது இருப்பினை யுணரப் பெருது சிவபெருமான் திருவடிகளைப் புறத்தே காண முயன்று அறியாது அயர்த்தல் அழகோ ? என இரங்கிக் கூறும் குறிப்புடையது,

முன் ஞய மாலயனும் வானவருத் தானவரும் பொன்ஞர் திருவடி தாமதியார் போற்றுவதே என்னகம் உள்புகுந் தாண்டுகொண்டான் இலங்கணியாம் பன்னகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ. எனவரும் திருப்பாட்டாகும். இது,

நாடி நாரணன் நான் முக னென் றிவர் தேடி யுந்திரிந் துங்கான வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் னெஞ்சு னிருக்கவே. 15 - 1 - 10, எனவரும் திருக் குறுந்தொகைப் பொருளை அடியொற்றி அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

ஆத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவு கொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுத லுத்தர கோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. எனவரும திருப்பாடல், சிவபெருமான் இலங்கையிலே அன்புள்ள வண்டோதரியம்மைக்கு அநுக்கிரகஞ் செய்ய