பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 盘警盘

யும் யாறும் படையுங்கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் பிறவும் வருவனவெல்லாங் கொள்க எனவும், " இவற்றுட் சிலவற்றை வரைந்து கொண்டு சின்னப்பூ வென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமாறுணர்க" எனவும் நச்சிஞர்க்கினியர் கூறுதலால், இவ்வாறு தசாங்கம் கூறுதல் பாடாண்டிணையில் உலக வழக் கொடு பொருந்தியதென்பதும், திருவாசகத்திற் காணப்படும் இத்திருத் தசாங்கம் பாடாண்டிணையில் கடவுள் வாழ்த்தின் பாற்படும் என்பதும் இனிது புலளும்,

உ0. திருப்பள்ளியெழுச்சி

" தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்

சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் " (தொல்-புறத்திணை-35) என வரும் சூத்திரத்தில், “ தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர், அத்துயிலெடுப்பின் ஏத்திய துயிலெடை என்ற துறையை ஆசிரியர் தொல்காப்பியனுர் குறித்துள்ளார். "துயில் எடை-துயிலினின்றும் எழுப்புதல் ; அஃதாவது பள்ளியெழுச்சி. துயிலெடை நிலையாகிய இத் துறை, அரசர்க்கு உரியதாய்த் தொன்றுதொட்டு வருமென் பது உம், சூதர், மாகதர், வேதாளிகர், வந்திகர் முதலாயி னுேருள் சூதர் என்பவரே இங்ங்னம் வீரத்தால் துயின் ருரைத் துயிலெழுப்புவர் என்பது உம், யாண்டும் முன்னுள் ளாரையும் பிறரையும் கூறப்படுமென்பது உம் கொள்க’ என்பர் நச்சிஞர்க்கினியர். " அவர் அங்ங்னம் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழ்தல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம் உளதாயிற்று ” என்பது நச்சினுர்க்கினியர் கருத் தாகும். ஞாலத்துவரூஉம் நடக்கையது, குறிப்பிற் காலம் மூன்ருெடு கண்ணியவரும் புறத்திணைத்துறைகளுள் ஒன்ரு கிய இத்துயிலெடைநிலை, உறங்கலும் விழித்தலும் உடைய ராய் உணர்த்த உணரும் இயல்பினராகிய அரசர் முதலிய மாந்தர்க்கே உண்மையாக உரியதாகும் உறங்கலும் விழித் தலும் இன்றி இமையா முக்கண்ணினய்ை, தானே முழு துனரும் இயற்கையுணர்வினகுய், நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் இறைவனைத் துயிலெழுப்புவதென்பது, உண்மை நிகழ்ச்சியாதலின்றி வெறும் உபசாரமேயாகும். ஆயினும் துஞ்சும் பொழுதாடுஞ் சோதி ஆகிய அம் முதல்வனை, உறங்கி விழிக்கும் இயல்பினராகிய மாந்தர் தாம் துயிலெழுங்