பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 盘*爵

யாகவுடைய இறைவனுகிய நீ அம்மையோடு அப்பணுகி இரு விரும் என் உள்ளத்தில் உயிர்க்குயிராய் எழுந்தருளியிருப் பது மெய்ம்மையானல், அடியேளுகிய யான் உன் மெய்யடி யாராகிய அன்பர் குழுவிலே ஒருவகை அவர்கள் நடுவே வாழும் இன்ப அன்பின எனக்கு அளித்தருளி எனது கருத் தினை முன்னின்று முடித்தருள்வாயாக என அடிகள் தில்லைச் சிற்றம்பலப் பெருமான இறைஞ்சி வேண்டுவதாக அமைந்தது,

உடையாள் உன் றன் நடுவிருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்

இருப்பதானுல் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளேப் புரியாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என் கருத்து

முடியும் வண்ணம் முன் னின் நே எனவரும் இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டாகும். சிவ மாகிய பரம் பொருளினின்றும் அதனிற் பிரிவிலாது விளங் கும் திருவருள் தோன்றுதலின் முழுமுதற் பொருளாகிய சிவம் அருளாகிய சத்திக்கு நிலைக்களமாகத் திகழ்வது என்ப தன, உடையாள் உன்றன் நடுவிருக்கும் என்றும், அவ் அருளே திருமேனியாகக் கொண்டு தோன்றி உயிர்களுக்கு எளிவந்தருளுதல் சிவத்தின் இயல்பாதலின் அத்தகைய சிவத்திற்கு அருளாகிய சிவசத்தியே நிலைக்களமாம் என்ப தனை உடையாள் நடுவுள் நீ இருத்தி என்றும், இறைவன் சத்தியும் சிவமுமாகிய தன்மையால் அம்மையோடு அப்ப ளுகி உயிர்தோறும் உயிர்க்குயிராய் எழுந்தருளியுள்ளான் என்பதனை, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானுல் என்றும் திருவாதவூரடிகள் விளக்கிய திறம் ஆழ்ந்துணரத் தக்கதாகும். இனி, உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இரு வீரும் இருப்பதாளுல் எனவரும் இத்தொடர் முத்தி பஞ் சாக்கரத்தின் அமைப்பினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்ததெனக் கூறுதலும் உண்டு.

முன்னின்ருண்டாய் என முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப், பின்னின்றேவல் செய்கின்றேன் எனவரும் இரண்டாந் திருப்பாட்டில் முன்னம் எனக் குறித்தது மகாகேவலத்தை எனவும், முயல்வுற்று' என்றது தாமே