பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 191

மாயையைச் சுத்தி பண்ணுதல் என முன்னேர் கருத்துரை வரைந்தனர்.

திருப்பெருந்துறையிற் குருவாய் வந்து மெய்ப்பொருளே உபதேசித்தருளிய இறைவன், திருவாதவூரடிகளைத் தனித் திருக்கச் செய்து அடியார் குழுவுடன் மறைந்த பொழுது, இறைவனைப் பிரிந்துறைதலாற்ருத அடிகள், இறைவனது திருவருளே வேண்டி இப்பதிகத்தினைப் பாடிப் போற்றிஞர் என்பது,

  • திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையிற்

- செழுமலர்க் குருந்தமே வியசிர் இருந்தவா றெண்ணி யேசரு நினைந்திட்

டென்னுடை யெம்பிரானென் றென் றருந்தவா நினைந்தே யாதரித் தழைத்தால்

  • அலைகட லதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி யிதுகாண்

போதராய் ' என்றருளாயே " (அருட்பத்து -10) எனவரும் இப்பதிகப் பாடலால் இனிது விளங்கும். இதன் கண் அலைகடல் என்றது, துன்ப அலைகளையுடைய பிறவிப் பெருங்கடலே. நாளுெணுததோர் நாணமெய்தி நடுக்கட லுள் அழுந்தி நான், பேளுெளுத பெருந்துறைப் பெருந் தோணி பற்றியுகைத்தலும் (திருக்கழுக்குன்றப் பதிகம் - 4) என அடிகள் இக்கடல் நடுவே தாம் சிக்கித் திருப்பெருந் துறையைத் தோணியாகப் பற்றி நின்ற திறத்தைக் குறித் துள்ளமை இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும்.

கல். திருக்கழுக்குன்றப் பதிகம்

திருவாதவூரடிகள் திருக்கழுக்குன்றத்தினை யடைந்து அங்குக் கோயில் கொண்டருளிய இறைவனை இறைஞ்சிப் போற்றித் திருப்பெருந்துறையிற் குருந்தமர நீழலில் குரு வாக எழுந்தருளி யிருந்து மெய்ப்பொருளை உபதேசித்தரு ளிய ஆசிரியத் திருக்கோலத்தை அடியேற்குக் காட்டியருள் வாயாக என வேண்டி நின்ருராக, இறைவனும் அடிகள் விரும்பிய வண்ணமே திருப்பெருந்துறையில் தான் கொண்ட திருக்கோலத்தினை அடிகளுக்குக் காட்டியருளினுன் என்ப தும், அத் திருக்கோலத்தினைக் கண்டு மகிழ்ந்த திருவாத வூரடிகள் திருக்கழுக்குன்றப் பதிகம் என்னும் இப்பனுவலைப் பாடிப் போற்றிஞர் என்பதும் வரலாறு. இச் செய்தி,