பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 133

பெற்று மண்சுமந்த அருட்செய்தியினையும், இறைவன் தமது கலக்கத்தை மாற்றிக் கண்ணிர் துடைத்து அருள் சுரந்த பெருமையினையும், திருப்பெருந்துறை பிறவிப் பெருங்கடலைக் கடத்தற்குரிய தோணியாகத் தமக்கு வாய்த்த பெற்றியினையும், கொழுநனே சிவன் எனக் கொண்டு போற்றும் வண்ணம் பேதமில்லதோர் கற்பளித்த பெருமையினையும், இறைவன் தன்னை வழிபட்ட இயக்கிமார் அறுபத்து நால்வரும் தன் அருட்பண்புகளாகிய எண்குணங் களையும் பெற்றுச் சிவமேபெறுந் திருவினராய் விளங்கச் செய்தருளிய சீர்த்தியினையும் திருவாதவூரடிகள் இத்திருப் பதிகத்தில் உளமுருகிப் பரவிப் போற்றியுள்ளார்.

ஆருந்திருப்பாடலில் பேதமில்லதோர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே என அடிகள் இறைவனைப் போற்றுகின்ருர், பேதம் இல்லதோர் கற்பு - வேறுபாடில் லாத கற்பு; கொழுநன் வேறு, சிவன் வேறு என்னும் வேற்றுமையின்றிக் கொழுநனே சிவன் எனக்கொண்டு போற்றும் மகளிரது உள்ளத்திண்மை. இத்தகைய உள்ளத் திண்மையைத் தன்னே வழிபட்ட இராவணன் மனைவியாகிய வண்டோதரிக்கு இறைவன் அருள் புரிந்தான் என்பதனை,

" ஏர்தரும் ஏழுலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாய்

ஆர்கலி சூழ்தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென் பாண்டி நாடனைக் கூவாய் "

(குயிற்பத்து - 2) எனவரும் திருப்பாடலில் அடிகள் விரித்துரைத்தமை இங்கு நினைக்கத்தக்கதாகும். இனி, பேதமில்லதோர் கற்பளித்த என்பதற்கு, பேதமில்லாத வண்ணம் ரிஷிபத்நிகளைப் பரமசிவனிடத்து வைத்த அன்பே கற்பென்னும்படி அவர் களாற் கொண்ட புருடன் ஏவல் கற்பைப் பொய்யெனக் காட்டி ஆண்ட " எனப் பொருளுரைப்பர் சீகாழித் தாண்டவராயர். அடியார்களைச் சிவனெனவே பேணிப் போற்றும் பேரன்பினைப் பேதமில்லதோர் கற்பு என இத்தொடரில் அடிகள் குறித்தருளினர் எனக்கொள்ளுதலும் பொருந்தும்.

க.க. கண்டபத்து தில்லைப்பதியை யடைந்த திருவாதவூரடிகள் தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் இயற்றியருளும் ஆனந்தத்

13