பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

பன்னிரு திருமுறை வரலாறு


திருக்கூத்தினைக்கண்டு மகிழ்ந்து கண்டபத்து என்னும் இத் திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றினர் என்பது வரலாறு. ஐம்புலன் வழியே சென்று மயங்கி அல்லற்படுந் தொல்லே கள் யாவும் நீங்கத் தில்லைச் சிற்றம்பலத்தே இறைவன் புரிந்தருளும் ஆனந்தத் திருக்கூத்தினைக் கண்டு மகிழ்ந் தேன் என்பதுபட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே' என்ருங்கு உவந்துரைக்கும் நிலையில் பத்துப் பாடல்களையுடைய திருப்பதிகமாக அமைந்தமையின் இது கண்டபத்து' என்னும் பெயருடையதாயிற்று. இதன் பொருளமைதியினை,

" இந்திரிய வயமயங்கா தேயெடுத்துத் தாளுக்கு

மெழிலானந்தம் கந்தமலி தில்லையினுட் கண்டேனென் றுவந்துரைத்தல்

கண்டபத்தாம் "

எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தால் அறியலாம். இதுபற்றி இப்பதிகத்திற்கு நிருத்த தரிசனம் ' என முன்னேர் கருத்துரைத்தனர். திருநாவுக்கரசர் திருவை யாற்றிற் கயிலைக்காட்சியைக் கண்டு பாடிய மாதர்ப் பிறைக்கண்ணியான என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகப் பாடல் தோறும் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் எனத் தாம் கண்ட தெய்வக் காட்சியை விரித்துரைத்துப் போற்றியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத் தக்கதாகும்.

கூஉ. பிரார்த்தனைப் பத்து

பிரார்த்தனை - வேண்டுகோள். திருவாதவூரடிகள் தம்மை ஆட்கொண்டருளிய இறைவனைப் போற்றி நின்னை விட்டு நீங்காவண்ணம் அடியேனே நின் திருவருள் வெள்ளத்தில் ஆழ்த்தியருள்வாயாக’ என வேண்டும் முறையில் இப்பதிகம் அமைந்தமையால் இது பிரார்த்தனைப் பத்து எனப் பெயர் பெற்றது. இதன் பொருளமைப்பினை,

" அந்தமிலா ஆனந்தத் தகலாம லெனேயழுத்தி

யாள் வாயென்று சிந்தைகலந் துரைத்ததுவே பிரார்த்தனைப் பத்தாய்ப்

புகலுஞ் செய்கைத் தாமே” என்னும் திருப்பெருந்துறைப் புராணத் தொடரால் உணர லாம்.