பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

பன்னிரு திருமுறை வரலாறு


விற்றல் வேண்டி மதுரை நகரத்தே குதிரைச் சேவகராய் எழுந்தருளிய தெய்வக்காட்சியில் திளைத்த திருவாதவூரடிகள் பரிப்பாகளுக எழுந்தருளிய இறைவனது திருக்கோலத்தின் பேரழகில் பாண்டிவேந்தனும் தாமும் மதுரை நகர மக்களும்ஈடுபட்டு நெஞ்சத்தினைப் பறிகொடுத்த பேரின்ப நிலையினை எடுத்துரைத்துப் போற்றும் நிலையில் அருளியது, திருப்பாண்டிப் பதிகமாகும். இறைவன் பாண்டிப் பிரானுக எழுந்தருளியபோது தமக்கு உண்டாகிய சிவானந்த விளைவினை அடிகள் விரித்துரைத்தலால் இதற்குச் சிவானந்த விளைவு - சுகமேலீடு என முன்னுேர் கருத்துரை வரைந்தனர். இது திருப்பாண்டி விருத்தம் ” எனவும் வழங்கும்.

புரவியின்மேற் பாண்டியன் முன் வரும்பதத்தை

யாம்பெறும் அற்புதம்போல் யாரும் விரவுமின்கள் என்றடியார்க் குறுதி சொலல்

திருப்பாண்டி விருத்தமாமே ' எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தொடர் இங்கு நோக்கத் தகுவதாகும்.

இதன்கண், பாண்டியற்கு ஆசமுதாம் ஒருவரை என் றும், ஒருவரையன்றி உருவறியாது என்றன் உள்ளமதே என்றும், மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடும் என்றும், பாரின்ப வெள்ளங்கொளப் பரிமேற் கொண்ட பாண்டியனுர், ஒரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் என்றும், ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் என்றும், பரவிய அன்பரை என்புருக்கும் பரம் பாண்டியனர் புரவியின்மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார், மரவியல் மேல்கொண்டு தம்மை யும் தாம் அறியார் மறந்தே என்றும் இறைவன் குதிரைச் சேவகளுக எழுந்தருளிய திருக்கோலத்தின் பேரழகினையும் அவ்வழகிலே பாண்டியனும் தாமும் இறைவனைக் காதலிக்கும் பரிபக்குவமுள்ள பேதை முதல் பேரிளம் பெண் ஈருகவுள்ள மற்றை மாதர்களும் ஈடுபட்டு மெய்ம்மறந்த நிலையினையும் அடிகள் நினைந்துருகிப் போற்றியுள்ளமை காணலாம்.

இப்பதிகத்தின் இரண்டாந் திருப்பாடலில், குதிரையின் மேல் வந்தருளிய இறைவனைக் கதிரை மறைத்தன்ன சோதி என்றும், அதனைச் சார்ந்தவர் தற்போதமிழந்து