பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பன்னிரு திருமுறை வரலாறு


திருவுளங்கொண்டு, மிழலை நாட்டுக்காட்டிலே திரியும் நரிகளை யெல்லாம் ஒருங்கு திரட்டி அவற்றுக்கு வேண்டிய அறிவுரை களைச் சொல்லி அவற்றையெல்லாம் குதிரைகளாக்கித் தம்மைப் பிரியாதுள்ள கணநாதர்களைக் குதிரை வீரர்களாகப் பணித்துத் தாமும் ஒரு குதிரைமீதமர்ந்து குதிரைத் திரளுடன் மதுரையை நோக்கி வந்தருளினர். அங்ங்ணம் வருபவர், வழியிடையே திருவாதவூரையடைந்து, வாதவூரடி கள் செவியிற்புலப்படும்படி தம்முடைய திருவடிச் சிலம் பொலியைக் காட்டியருளினர். சிறையிலிருந்தபடியே சிலம் பொலியைக் கேட்ட வாதவூரடிகள், இஃது என்னையாண்ட எம்பிரானது பாதச்சிலம்பொலியே யாகும் எனத்தெளிந்து இறைவனை இறைஞ்சினர். அப்பெருமான் குதிரைகளைக் கொண்டுவந்தமையுணராது, அவற்றைக்கொணர்ந்தருளும் படி இறைவனை நினைந்து குறையிரந்து வேண்டினர். அந் நிலையில் குதிரைத்திரளின் வருகையைக் கண்ட சிறைக்காவ லர், மனமகிழ்ந்து வாதவூரடிகளை யணுகிக் குதிரைகளின் வரவினை நேரிற் சென்று பாண்டியனுக்குத் தெரிவிப்பீராக ' எனச்சொல்லி அடிகளைச் சிறையினின்றும் விடுவித்தார்கள். அடிகளும் அவ்வண்ணமே மதுரையை யடைந்து பாண்டி யன் முன்னர்ச் சென்று நமது மதுரைப்புறத்தே குதிரை கள் வந்தன என்று தூதர்கள் தெரிவித்தார்கள் எனக் கூறினர். அது கேட்டு மகிழ்ச்சியுற்ற பாண்டியன், குதிரை களின் வரவை எதிர்பார்த்து வீதியின் கண்னதாகிய மண்ட பத்தில் வந்து அமர்ந்தான். மன்னன் நெடுநேரங் காத்தி ருந்தும் சிவபெருமானது அருள் விளையாட்டால் குதிரைகள் வரத் தாழ்த்தன. பரிகளைக் காணுது மனம் புழுங்கிய பாண்டி யன், ஒற்றர்களை ஏவ, அவர்கள் நாற்றிசையிலும் சென்று நோக்கிக் குதிரைகளைக் கண்டிலோம் எனக் கூறினுர்கள். அது கேட்டு வெகுண்ட அரசன், நமது பொருளை யெல் லாம் வீணே செலவிட்டதுமன்றி இங்ங்னம் குதிரைகள் வருவதாகச் சொல்லி ஏமாற்றும் இவ்வமைச்சனை ஊரி னுள்ளே கொண்டு போய் நிறுத்திப் புளியம்வளாரால் அடித்துத் துன்புறுத்துமின் எனத் தண்டத் தலைவரை நோக்கிக் கூறினன். அவர்களும் அவ்வாறே அடிகளே யிழுத்துச் சென்று துன்புறுத்தத் தொடங்கிய அளவில், அடிகள் கண்களில் நீர் மல்கத் திருமுகம் வியர்க்கச் சிவபெரு மான நினைந்து அடைக்கலப் பத்துப் பாடினர். சிறைக்