பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

பன்னிரு திருமுறை வரலாறு


தில் கைக்கிளை, பெருந்திணை என்பவற்றின் இலக்கணங் கூறும் இரு வேறு சூத்திரங்களாக அமைந்திருத்தல்

岛鹰”5葆了芯。

இனி, பேராசிரியர் உரையினையுளத்துட் கொண்டு இத் திருக்கோவையின் பொருள் நலங்களை ஒரு சிறிது நோக்கு தல் இத்திருமுறையாராய்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளினும் இன்பத்தை நுதலி இத்திருக்கோவையின் கண் உரைக்கின்ற களவியற் பொருளினது பொழிப்பிலக் கணத்தினையும் அதற்கு உறுப்பாகிய கைக்கிளைத் திணையின் கண் முதற் கிடந்த காட்சி என்னும் ஒருதலைக் காமத்தினை யும் உடனிலைச் சிலேடையாக உணர்த்துவது,

திருவளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண்

டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந் துருவளர் காமன் றன் வென்றிக் கொடிபோன்

ருெளிர்கின்றதே. எனவரும் முதல் திருப்பாட்டாகும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகனும் தலைமகளும் பண்டைப் பிறப்பிற் பழகிய நல்லூழின் பயனகத் தத்தம் ஆயத்தின் நீங்கி ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் தனிமையிற் கண்ணுற்றபொழுது, வேட்கைவயத்தளுகிய தலைமகன் தலைமகளைக் கண்டு வியந்து கூறுவதாக அமைந்தது, இத் திருப்பாடலாகும்.

'திருவளரும் தாமரைப் பூவினையும் அழகு வளரும் நீலப் பூக்களையும் இறைவரது தில்லையெல்லைக்கண் உண் டாகிய பூங்குமிழினது நிறம் வளரும் பூவினையும் கோங் கரும்புகளையும் செவ்விக்காந்தட் பூக்களையும் உறுப்பாகக் கொண்டு மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலையானது, ஒரு கொடிபோல நுடங்கி, அன்னத்தின் நடைபோலும் நடையினைப் பொருந்தி, வடிவு வளரும் மன்மதனது வெற்றிக்கொடி போன்று ஒளிமிக்கு விளங்குகின்றதே ; இஃது என்ன வியப்பு ' என்பது இதன் பொருள்.

திரு என்பது, கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்; அஃதாவது அழகு. தாமரை, நெய்தல் (நீலம்),