பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

பன்னிரு திருமுறை வரலாறு


தலைவன் செய்த பேருதவியை நினைந்து நெஞ்சம் நெக் குருகிய தலைமகள் கூற்ருக அமைந்த இத்திருப்பாடலில்,

” வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து

வாங்குமவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே "

எனவரும் பின்னிரண்டடிகளும், திருவாதவூரடிகள் தம் ஆருயிர் நாயகளுகிய இறைவன் தமக்குச் செய்த பேருதவியை நினைந்து நெஞ்சங்கசிந்துருகிப் போற்றும் செய்ந்நன்றி மறவாக் குறிப்புடையனவாக அமைந்துள்ளன. இக்குறிப்பினைக் கூர்ந்துணர்ந்த பேராசிரியர், ' பிறவிக் குட்டத்து யான் விழுந்து கெடப்புகத் தாமே வந்து பிடித் தெடுத்து அதனினின்றும் வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனுகிய யான் சொல்வதறியேன் என்று வேறுமொரு பொருள் தோன்றியவாறு கண்டுகொள்க' என எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்.

கோவைத் திருவாசகமாகிய இந்நூல், இதன் ஒரு பகுதி யாகிய திருவாசகத்தோடும் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தோடும் அறிவனுாற்பொருளால் ஒத்துவிளங்கும் திறத்தினை இந்நூலுரையில் ஆங்காங்கே பேராசிரியர் எடுத்துக் காட்டியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

67-ஆம் பாடலுரையில்,

" மற்றை(ப் பொய்வானவர்) என்பது பாடமாயின், அல்லாத பொய்வானவர் என்றுரைக்க. இனமல்லராயினும் இனமாக உலகத்தாராற் கூறடுப்படுதலின் அவ்வாறு கூறி ஞர். மூவரென்றே எம்பிரானெடும் எண்ணி ' என்பது உம் அக்கருத்தேபற்றி வந்தது. பிறர் கூறும் பெருமை அவர்க் கின்மையிற் பொய்வானவர் என்ருர் ” எனப் பேராசிரியர் கூறும் விளக்கம், வாதவூரடிகள் கருத்தினை அடியொற்றி யமைந்ததாகும்.

" தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல், தன்ளுெருபா

லவள் அத்தளும் மகளும் தில்லையான் ” (திருக்கோவை-112) என உமையொருபாகனகிய இறைவனை அடிகள் போற்றி யுள்ளார். வெண்மையையுடைய திருநீற்றினையணிந்த பெரிய தோள்களையுடைய அண்ணல், தனது ஒருபாகத்து உள்ளவளாகிய உமாதேவிக்கு அப்பனும் ஆகி மகனும்

திருவாசகம் - திருச்சதகம் 4