பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பன்னிரு திருமுறை வரலாறு


னும் இவற்றை நல்லனவாகத் தேர்ந்து வாங்கிய வாத வூரரை நோக்குமின் ' எனப் பலமுறை வியந்துரைத்தான். குதிரைப் பாகனுகிய இறைவன், அரசன் முன் வந்து ‘அரசே உன் மந்திரியாகிய வாதவூரர் தந்த பொருளனைத்தையும் குதிரைகள் தருவதாகச் சொல்லி எம்மவர்கள் கைக்கொண் டார்கள். இக் குதிரைகள் பல தீவுகளிலிருந்தும் இமய மலைக்கு அப்பாலிருந்தும் பெருந்துறையிலே வந்திறங்கி இங்குக் கொண்டுவரப்பட்டன. உடற்பழுதின்றி நற்சுழி களும் நன்னிறங்களும் வாய்ந்த உயர்ந்த சாதிக் குதிசை களாகிய இவை நூருயிரத்திற்கும் விலையாக, யாங்கள் பெற் றுக்கொண்ட பொன் நூருயிரமாகும். அறிஞர் முன்னே இவற்றின் நல்லியல்புகளை ஆராய்ந்து கண்டு இக்குதிரை களைக் கைக்கொள்வாயாக. இவை நின்னுடையனவாகக் கைக்கொண்ட பின்னர் இவற்றின் நன்மை தீமைகள் எம்மைச் சார்ந்தனவாகா எனக் கூறி, ஆவணி மூல நாளிற் குரைகளைக் கயிறு மாறிக் கொடுத்தருளிஞன். பாண்டிய னும் குதிரைச் சேவகளுகிய இறைவன் சொல்லியவற்றிற் கெல்லாம் முழுதும் உடன்பட்டு நாம் குதிரைகள் வாங்கு தற்காகக் கொடுத்த பொன் முழுவதும் இவற்றுள் ஒரு குதிரைக்கேனும் விலையாகப் போதா எனக் கருதியவனுய், அப் பரித்திரளை ஏற்றுக் கொண்டான். பரித்துறைக் காவ லாளரை யழைத்துக் குதிரைகளை அவர்டால் ஒப்புவித்து அவற்றைப் பந்திகளிற் சேர்க்கும்படி கட்டளையிட்டான். அவர்களும் அக் குதிரைகளைக் கொண்டு சென்று பந்திகளிற் பிணித்தனர்.

கிடைத்தற்கரிய குதிரைகளைப் பெற்ற மகிழ்ச்சியினுலும் குதிரைப்பாகர் காட்டிய குதிரை யேற்றத்தைக் கண்ட வியப் பினுலும் உள்ளங்கிளர்ந்த பாண்டியன், விலை மதித்தற்கரிய பொற் பட்டாடையினைத் தன் கையால் எடுத்துக் குதிரைச் சேவகளுக வந்த இறைவனுக்கு நல்கினன். அத்தலைவன் அவ்வாடையினைத் தன் பரிக்கோலின் முனையால் வாங்கித் தன்னடியாராகிய வாதவூரர் பொருட்டுத் தன் முடிமிசைப் புனைந்து கொண்டான். தான் கொடுத்த ஆடையைப் பரிக் கோலால் ஏற்றது கண்டு பாண்டியன் சினங்கொண்டான். அருகேயிருந்த வாதவூார். அஃது அவர் நாட்டு வழக்கம்' என அமைதி கூறி அரசனது சினத்தைத் தணிவித்தார் மன்னன் அத்தலைவனோடு உடன் வந்த மற்றைய வீரர்க