பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

பன்னிரு திருமுறை வரலாறு


ஆண்டுள்ளார். அவ்வுவமைகளின் நுட்பங்களைப் பேரா சிரியர் தமது உரையில் நன்கு விளக்கியுள்ளமை காண்க. இதன்கண் இல்பொருளுவமை - அபூத உவமை, 125, 244, எதிர்காலக் கூற்றிடத்துக் காரியத்தின் கண் வந்த இரங்கல் விலக்கு, உபாய விலக்கு 157, பரியாயம் 161,289, புகழுவமை 162, அல்பொருட் டற்குறிப்பேற்றம் 185, ஒற்றுமைக் கொளுவுதல் 195, புகழாப் புகழ்ச்சி 202, கூற்றிடத் திரு பொருட்கண் வந்த உயர்ச்சி வேற்றுமை 217, முயற்சி விலக்கு, பொருள் முரண் 289, மிகைமொழி 295 ஆகிய அணிகள் பயின்றுள்ள திறத்தை அவ்வப் பாடல்களின் உரையிற் பேராசிரியர் குறித்துள்ளமை காணலாம். 899-ஆம் திருப்பாடலில் எண்ணலங்காரம் அமைந்துளது.

பாட்டுடைத் தலைவனுகிய இறைவன் திருக்கூத்தியற்றி யருளும் திருவருள் நிலையமாகிய திருச்சிற்றம்பலத்தின் சீர்த்தியினை அடிகள் இத்திருக்கோவையிற் பாடல் தோறும் துதித்துப் போற்றியுள்ளமை காணலாம். திருவளர் திருச் சிற்றம்பலத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் பெரும் பற்றப் புலியூராகிய தில்லைப்பதி, சோலையும் தடாகமும் சேணுயர் மதிலும், அதனை யொட்டிய அகழும், பொன்னிப் புனல் பாயும் கால்வாய்களும் வயல்களும் புடை சூழப்பெற்ற தாய், உப்பங்கழிகளும் அவற்றையடுத்துள்ள கடற்கரைச் சோலையும் கடலும் அணுகப் பெற்றதாய் அமைந்துள்ள தோற்றத்தினை, குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லை (44), திகழ்பொழிற்றில்லை (166) எனவும், தில்லைத்தண் பூம் பனையுந்தடமும் (188), புலியூர்ப் பழனத்து அகன் தாமரையன்னம் (184) எனவும், சேடார்மதில் மல்லல் தில்லை (161) கற்பாமதிற்றில்லை (310), வானக்கடிமதிற் றில்லை (335) சேனுந் திகழ்மதிற்தில்லை (341) எனவும் அகழும் மதிலும் அணிதில்லை (181), எனவும், ' குரூஉக் கமலந், துன்றங்கிடங்கும் துறை துறைவள்ளை வெள்ளை நகையார், சென்றங்கடை தடமும் புடைசூழ்தரு சேணகரே எனவும், பொன்னி வளைத்த புனல் சூழ்நிலவிப் பொலி புலியூர் (817) எனவும், வடிவார் வயற்றில்லை (139). வயல்கொண்ட தில்லைமல்கூரர் (386) தில்லையின்வாய்த், தூண்டிலெடுத்த வரால் தெங்கொடெற்றப் பழம் விழுந்து, பாண்டிலெடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே (240) எனவும், தில்லைமெல்லங் கழிசூழ் கண்டலையே கரியாக்