பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 269

கன்னிப் புன்னைக் கலந்த கள்வர் (178) தில்லைநகர் சூழ் போதுற்ற பூம்பொழில்காள் கழிகாள் (174) ' புலியூர் ஓங் கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் தீங் கணைந்து ஓர் அல்லுந் தேருய் கலங்கிச் செறிகடலே ' (179), புலியூர் சுற்றும் போர்க்கடலே ' (183) உடையான் புலியூர்க் கொண்டலுற்றேறும் கடல்வர (290) எனவும் வரும் தொடர் களால் அடிகள் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

புலியூராகிய தில்லைப்பதி, வானுற வுயர்ந்த மாட மாளிகைகளையுடையதாய் விளங்கிய திறத்தைப் பொன்ன ரணிமணி மாளிகைத் தென்புலியூர் (217) எனவும் செழு மிய மாளிகைச் சிற்றம்பலவர் (393) எனவும் வரும் தொடர் களால் அறியலாம். இத்தில்லை நகரத்தின் நடுவே விளங் கிய திருக்கோயில், நெடுந்துாரத்திலேயே ஒளியுடன் திகழும் செம்பொன் மாளிகையாகிய பொன்னம்பலத்தினைத் தன் னகத்தே பெற்றதாய், அழகிய சிற்பங்கள் பலவற்றை யுடையதாய் அமைந்திருந்த தென்பதும், அதன் நடுவே மாணிக்கக் கூத்தன் ஆடல் புரிந்தருளும் தில்லைச் சிற்றம்பல மாகிய திருமன்றம் அழகிய சிறந்த ஓவியங்கள் பல எழுதப் பெற்றுக் கவினுறத் திகழ்ந்ததென்பதும், சேணிற்பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (23) எனவும், சிற்பந் திகழ்தரு திண்மதிற்றில்லை ' (305) எனவும், சிற்றம்பலத்தெழுதும் ஓவியங் கண்டன்ன ஒண்ணுதலாள் (384) எனவும் வரும் திருக்கோவைத் தொடர் களால் அறியப்படும்.

தில்லையம்பலத்திலே அம்பலவாணர் சந்நிதி தென்திசை நோக்கி அமைந்துள்ள தன்மையினைத் தென் மாத்திசை வசை தீர்தரத் தில்லைச் சிற்றம்பலத்துள், என்மாத் தலைக் கழல்வைத் தெரியாடும் இறை (338) என்பதலுைம், தில்லை யில் பதஞ்சலி முனிவர் தொழுது போற்ற இறைவன் ஆடல் காட்டியருளிய அற்புத நிகழ்ச்சியை நாகந்தொழவெழி லம்பலம் நண்ணி நடம் நவில்வோன் (171) என்பதஞலும், தில்லையிற் கூத்தப்பெருமானை மூவாயிரவராகிய அந்தணர் கள் ஒருங்கே குழுமி நாளும் பூசனை செய்து வழிபடும் முறை யினை, தில்லையம்பலத்து மூவாயிரவர் வணங்க நின்ருேனை (72) என்பதலுைம், தம் காலத்தில் தில்லையம்பலத் திரு முற்றத்திலே திருமால் அறிதுயிலமர்ந்த கோலத்தில் திருவுருவமைக்கப் பெற்றிருந்த செய்தியினை, வரங்