பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

பன்னிரு திருமுறை வரலாறு


கிடந்தான் தில்லையம்பல முன்றிலம் மாயவனே (86) என் பதனுலும் திருவாதவூரடிகள் இத்திருக்கோவையிற் குறித் துள்ளமை அறியத் தக்கதாகும்.

தில்லைச் சிற்றம்பலத் திருக்கோயிலில் வழிபாட்டுக் காலங்களில் நாள்தோறும் குடமுழாமுழக்கப்பெறும் நிகழ்ச்சி வினை, சிற்றம்பலத்து அடியேன், களிதரக் கார்மிடற்ருேன் நடமாடக் கண்ணுர் முழவம், துளிதரற் காரென ஆர்த்தன (324) என்பதனுலும், தில்லைக்கோயிலில் நிகழும் சிறப்புடைய திருவிழாக் காலங்களில் இராப்பொழுது பல நிற மணிமாலை களின் ஒளியாலும் பலவாக ஏற்றப்பட்ட விளக்குகளாலும் இருள் நீங்கிப் பகற்பொழுது போன்று விளங்கிய திறத்தினை, இன்னற வார்பொழிற் றில்லைநகர் இறைசீர் விழவிற் பன்னிற மாலைத்தொகை பகலாம் பல்விளக் கிருளின் (175) என்பதனுலும், அக்காலத்தில் பாண்டிய நாட்டினையும் சோழ நாட்டினையும் ஆண்ட பெருவேந்தனுகிய வரகுண பாண்டியன் தில்லையம்பலப் பெருமானை மகிழ்ந்து போற்றும் பெரு வேட்கையுடையணுய் அன்பினுல் ஏத்தி வழிபட்ட செய்தியை வரகுணனுந் தென்னவனேத்து சிற்றம்பலத்தான் (306) சிற்றம்பலம் புகழும் மயலோங்கிருங்களியான வரகுணன் (327) எனவரும் தொடர்களாலும் மணிவாசகப்பெருமான்

இத்திருக்கோவையில் இனிது விளக்கியுள்ளார்.

தில்லைக்கு மேற்கேயுள்ள கடம்பூரின் அருகே நீர் நிரம்பிய பெரிய தடாகம் ஒன்று அமைந்திருந்த செய்தி யினைத் திருக்கோவை 220-ஆம் திருப்பாடலில் அடிகள் குறிப்பிட்டுள்ளமை நோக்கத் தக்கதாகும்.

தில்லைச் சிற்றம்பலத்தைச் சிறப்பித்துப் போற்றும் இத் திருக்கோவையில், அம்பர் (182), இடைமருது (268), ஈங்கோய்மலை (113 204), ஏகம்பம் (268), கடம்பை (220), கழுக்குன்று (107). காழி (379), குற்ருலம் (94, 135), கூடல் (20, 376), கொடுங்குன்று (150), கயிலை (6, 16, 22, 25, 29, 30, 34, 37, 38, 54 – 56, 59, 62, 76, 120, 132, 138, 141, 145, 169, 245, 280, 294, 378, 383), சிவநகர் (209), சுழியல் (377), திருப்பனையூர் (137), பரங்குன்று (100, 144, 178, 279, 292), பூவணம் (305, 338), பெருந்துறை (104) பொதியில் - மலயம் (8, 91, 199, 140, 153, 154, 336, 392, 394, 15, 68), மூவல் (191, 304), வாஞ்சியம் (268), வெண்காடு (286)