பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

பன்னிரு திருமுறை வரலாறு


நிற்றலின், நிகழ்காலம் புலகை என்பிறவி கெட்டு இன்று அழகின்றதாக்கிய தாள் அம்பலவன் ' என 76-ஆம் பாடலிலும், சிவதத்துவத்தினின்றும் சத்திதத்துவமும் சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவமும் தோன்றும் என்பதனை 'தன்ைெருபாலவள் அத்தளும் மகளும் தில்லை யான் என 1.12-ஆம் பாடலிலும், பாசமாகிய தளையிற் பட்டுக்கிடத்தல் உயிரியல்பு என்பதும், உயிர்களின் பாசத் தளையறுத்து ஆண்டு அருள்புரிதல் இறைவன் இயல்பென் பதும் ஆகிய உண்மையினை, பாசத்தளையறுத் தாண்டு கொண்டோன் ' என 115-ஆம் பாடலிலும், உயிர்கட்குப் புகலிடம் இறைவனே என்பதனை 143-ஆம் பாடலிலும், சிவத்தைத் தலைப்பட்டு இரண்டறக்கலந்த ஆன்மா மீளவும் அதனைவிட்டு நீங்கிப் பிறவியுட் புகுதல் இல்லை என்பதனைப் புகுநர்க்குப் போக்கரியோன் என 188-ஆம் பாடலிலும், தில்லையம்பலத்தோளுகிய இறைவனது அருள் எல்லையினைத் தலைப்பட்டவர்களாகிய சீவன்முத்தரது இயல்பு உலக மெங்கும் பரவி அகண்ட பரிபூரணராய் இருத்தல் என்னும் மெய்ம்மையினை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் நலம் பாவிய முற்றும் என 197-ஆம் பாடலிலும் அடிகள் குறித்துள்ள திறத்தினைப் பேராசிரியர் அவ்வத்திருப்பாடல் களின் உரையில் நன்கு விளக்கியுள்ளார்.

அகத்தமிழ்க்கோவையாகிய இந்நூலில் இடம் பெற்று உரையாடும் இயல்பினராகிய தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய அனைவரும், இந்நூலின் பாட்டுடைத் தலைவனுகத் திகழும் தில்லையம்பலவணுகிய இறைவனுடைய திருவடிகளில் அழுந்திய பேரன்பினராய், அம் முதல்வனுக் குத் தொண்டராய் ஒழுகும் சிவபத்திச் செல்வராகத் திகழ் கின்ருர்கள். இவ்வுண்மை, அவர்கள் தத்தம் உரையாடல் களில் தில்லையம்பலப் பெருமானுக்கும் தமக்கும் உள்ள ஆண்டானடிமைத் தொடர்பினை ஆங்காங்கே குறித்துச் செல்லுதலால் நன்கு தெளியப்படும்.

இனி, இத்திருக்கோவையில் கிளவித்தலைவன் இயல்பாக வந்தனவெல்லாம் அடிகளது இயல்பு-அஃதாவது ஆன்மா வினது இயல்பு உணர்த்துவன எனவும், தலைவியின் @ುಮ್ನೇಹ வந்தனவெல்லாம் o இறைவனது இயல்பு உணர்த்துவன எனவும் பிற்காலச் சான்ருேரொருவர் இத் திருக்கோவையாருக்குப் பேரின் பத்துறை வகுத்துள்ளார்.