பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 273

இத்துறையமைப்புப் பற்றிக் கி. பி. 1834-ஆம் ஆண்டில் திருவாசக வியாக்கியானம் எழுதிய சீகாழித் தாண்டவராயர் கூறுங் கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

" தோத்திரங்கள் அன்பினுல் நிகழ்ந்த மொழியாதலின் துறைகளில் அமைந்தேயிருக்கும். துறையாவது அன்பு முதிர்ச்சி. நாயகன் நாயகி இவர்களின் அன்புத் தொடர்ச்சியை நானுாறு விதமாகப் பாராட்டி வருணிக்கக் கூடும் ஆதலால் நாயன்மார்கள் திருவாக்குகள் அப்படியே இருக்கின்றன. பரமசிவன் மதுரைத் திருப்பதியில் தெய்வப் புலமையாகிய பொய்யடிமை யில்லாத புலவரான திருச் சங்கத்துள் இறையனர் என்று தாமும் ஒரு புலவராக எழுந் தருளியிருந்து நற்கீரர்க்கு அநுக்கிரகம் செய்யும் போது இறையனர் பொருள் ' என்றே பஞ்ச விலக்கணத்தில் பொருளதிகாரக் கருத்து முழுவதும் இந்தத் துறையே விளங்கும்படி சூத்திரமாகத் திருவுளம் பற்றினர்.

அத்துறைகளில் நாயன்மார்கள் அருள் செய்த தோத்திரங்களில் சில துறைகள் வரும், வாதவூரடிகள் அருளிய கோவைத் திருவாசகத்தில் துறைகள் எல்லாம் அடங்கும்.

பத்திமுத்திக்கு உவமை பெத்தம் ; பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து, உடம்பையுடைய யோகிகள் பால் உற்ற சிற்றின்பம், அடங்கத்தன் பேரின்ப மாக, பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஒரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக, சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மா வாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்ம போதமாக, நற்ருய் பரையாக, திரோதாயி செவிலித்தாயாக, மேலும் நாயகன் கூற்றெல்லாம் நாயகி கூற்ருகவும், நாயகி கூற்றெல்லாம் நாயகன் கூற்ருகவும் நிகழ்ந்து வரும். அவை அநுபூதியாற் காண்க.

நாயகியைச் சிற்றம்பலம் போல வருணிக்கையால் நாயகி பரம்பொருளாயிற்று. பெறுவான் நாயகனும், பேறு நாயகியு மாக இரசமும் நாவும் போல இருத்தலானும், கொத்தும் துறையும் கருப்பொருளும் உரிப்பொருளும் இடமும் எல்லாம் அருளின்பமெனக் கொள்க.

  1. 8