பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்:லக்கோவை 2?烧

வும் உயிராகிய தன்னை அவனைத் தலைப்பட்டு மகிழ விழைந்த தலைவியாகவும் கருதியொழுகும் இயல்பினதாகும். 'முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் ... .... தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே " (6-25-7) எனவரும் திருப்பாட்டும் இறை வனைக் காமுற்று வருந்தும் தலைமகள் நிலையில் நின்று அருளாசிரியர்கள் அருளிச் செய்த திருப்பாடல்கள் பலவும் தொன்றுதொட்டு வரும் இம்மரபினை வலியுறுத்துவனவாகும். கடவுள்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கமாகிய பாடாண் டிணைப் பகுதியும் இம்மரபின் தொன்மையினைப் புலப்படுத்தல் அறியத் தக்கதாகும். இம்மரபு, சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தத்திலும் இவற்றை யடியொற்றித் தோன்றிய பிற்காலப் பனுவல்களிலும் சிறிதும் பிறழாதமைந்திருத்தல் காணலாம். இதற்கு மாருக இறை வனைத் தலைவியாகவும் அவனை அடைந்து மகிழ எண்ணிய ஆன்மாவைத் தலைவனுகவும் கொண்டு கூறும் கூற்று சைவத் தொன்னுரல்களிற் காணப்படாத புதுமையுடைய தொன்ரும். தலைவியை அவளிருக்குமிடம் நாடியடைந்து மணக்குந் தலைமைப்பாடும் ஊற்றமும் தலைவனுக்கே உண்டு அதுபோல் ஆன்மாக்களை வலியவந்து ஆட்கொண்டருளும் தலைமையும் தகவும் உயிர்த் தலைவனுகிய இறைவனுெரு வனுக்கே யுரியது. உயிர்கள் அவனருளாலேயே அவனை அடைந்து இன்புறுதற்குரியன. அவ்வுயிர்கட்கு எளிவந்து ஆட்கொண்டு இன்னருள் சுரக்கும் தலைமை இறைவனுக்கே யுரிய தொன்ருகலின் ஆண்டாகிைய இறைவனே தலைவன் என்றும் அவளுல் தலையளிக்கப்பெறும் ஆன்மா அவனருளே எதிர்நோக்கும் தலைவியென்றும் கொண்டு போற்றும் முறையே சைவ வைணவத் தமிழ் நூல்களில் உள்ள அகத் துறைப் பாடல்களிற் காணப்படுகின்றது.

திருவாதவூரடிகள், தாம் பாடியருளிய திருவாசகச் செழும்பாடல்களில், இறைவனைத் தலைவனுகவும் உயிராகிய தம்மை அவனருள் விழைந்த தலைவியாகவும் கொண்டு அன்புசெய்து போற்றியுள்ளார். அன்றியும் தாம் இயற்றிய திருக்கோவையில் வரும் அகப்பொருளொழுகலாற்றுக்குரிய தலைவியைப் பெருந்துறைப்பிள்ளை என்ற பெயராற் குறித் துள்ளார். பெருந்துறைப்பிள்ளை என்னும் இப்பெயர் திருவாதவூரடிகளைக் குறித்து வழங்கும் பெயரென்பது, திருந்திய அன்பிற் பெருந்துறைப்பிள்ளையும் எனவரும்