பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை: 畿?

தலைமகன் பொருள்வயிற் பிரியக் கருதுகின்ருன் எனத் தோழி கூறக் கேட்ட தலைமகள், அச்சொற் கேட்டு ஆற்ருது புலம்புவதாக அமைந்தது,

சிறுவா ளுகிருற் றுரு முன்னஞ் சின்னப் படுங்குவளைக் கெறிவாள் கழித்தனன் தோழி யெழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழிகுவ தஞ்சனம் அம்பலவர்ப்பணியார் குறிவாழ்நெறிசெல்வ சன்பரென் நம்ம கொடியவளே.

(திருக்கோவை-834) எனவரும் திருப்பாடலாகும். ' கண்ணிற்கு மையெழுது கின்ற அச்சிறிய பொழுதளவும் காதலர் தோன்ருமையால் மையெழுதற் ருெழிலை யான் ஒழிந்திருத்தலைத் தோழியாகிய கொடியவள் அறிவாள். (அங்ங்னம் அறிந்திருந்தும்) அம்பலவரை வணங்காதார் அவ் வணங்காமைக்கு அறிகுறி யாக வாழும் வெம்மைமிக்க பாலைநில வழியில் அன்பர் செல்வர் என்று கூறி, ஒளியையுடைய நகம் சிறிது ஊன்று தற்கு முன்னமே கிழிந்து சிதையும் நீல மலரைப் பறித்தற்கு (மரம் முதலியவற்றை) வெட்டுதற்குக் கருவியாகிய வாளை உறையினின்றும் எடுத்தாள் ” எனத் தலைமகள் ஆற்ருது புலம்புகின் ருள். இதன்கண், அஞ்சனம் எழுதின் (காதலர்) கரப்பதற்கே (அஞ்சனம் எழுதுதல்) ஒழிகுவது அறிவாள்' என்றது, கண்ணுக்கு மை எழுதப்புகின் எழுதுகின்ற காலம் அத்துணையும் காதலர் (கண்ணில்) தோன்ருமையால் யான் என் கண்ணுக்கு மை எழுதாதொழிந்திருத்தலே என்னுட னிருக்கும் தோழியாகிய அவள் நன்கு அறிவாள் ' என்று தலைமகள் தலைமகனைக் கண்ணிமையாது காண்டலில் தனக் குள்ள வேட்கையினைப் புலப்படுத்தியபடியாம். இத்தொடர்,

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேங் கசப்பாக் கறிந்து (1137) எனவரும் திருக்குறட் பொருளைக் கொண்டு கூறியதாகும். காதலர் எப்பொழுதும் என் கண்ணில் உள்ளாராதலால் கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதுஞ் செய்யேன் ; அத் துணைக் காலமும் அவர் மறைதலையறிந்து' என்பது இதன் பொருளாகும்.

"தலைமகள் தன் கணவனையன்றி வேருெரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாளாதலால், தலைவன் தன்னை வணங்காத பகைவரைச் சென்று கிட்டித் திறை கொண்டுவந்து அவளது இல்லத்துத் தங்குவதல்லது புறத்தே தங்கி