பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாந் திருமுறை 367

தாகச் சேந்தனர் பாடிய திருப்பதிகம், மாலுலாமனந் தந்து எனத் தொடங்கும் திருவிசைப்பாவாகும். அரன் மதலையும் கணபதி இளங்கிளை யுமாகிய முருகவேள், கங்கை தன் சிறுவனுக வளர்ந்து தேவர் சேனுபதியாய் அசுரர்மாள உழிஞை சூடிக் குன்றமெறிந்து சூர்மாவினைத் தடிந்து வள்ளியை மணந்து திருமால் மருகளுகித் திகழுஞ் சீர்த்தியும், சுப்பிரமணியனுகிய அத்தோன்றல் கவளமா கரிமேற் கவரிசூழ்குடைக்கீழ்த் திருவுலாவரும் சிறப்பும், அறுமுகச் செவ்வேளாகிய பெருமானது பேரழகில் ஈடுபட்ட மகளிர் மடல் தொடங்கிய நிலையும், பிடவூர் வாழும் அம்மகளிர்க்கு அறுமுகப் பெருமானது திருவருள் கிடைத்தல் உறுதியென அவர்தம் தாயர் கொண்ட நம்பிக்கையும் இத் திருப்பதிகத்தில் விரித்துரைக்கப் பட்டுள்ளமை படித்து இன்புறுதற்குரியதாகும். திருவிடைக் கழி என்னும் இத்திருப்பதி மாயூரந் தாலுகாவில் உள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்ற சோழ மன்னனது பள்ளிப்படை இவ்வூரின் அருகே வீரசோழ குற்றங்கரையில் இன்றும் அமைந்துள்ளதெனக் கூறுவர். இதனையுய்த்துணருங்கால் சங்க காலத்திற் குராப்பள்ளி யென்ற பெயரால் வழங்கியவூர் இத் திருவிடைக்கழியே யென்பது நன்கு புலனும். இவ்வூர்க் கோயிலில் முருகப் பெருமான் குரா மர நீழலிலமர்ந்திருத்தல் குராவுக்கும் இவ் வூருக்கும் அமைந்த தொன்மைத் தொடர்பினை மேலும்

உறுதிப்படுத்துவதாகும்.

தில்லையில் மார்கழித் திருவிழாவில் ஓடாமல் தடைப் பட்டு நின்ற திருத்தேர் ஒடும்படி பாடியது திருப் பல்லாண்டுத் திருப்பதிகமென்பது முன்னர் விளக்கப் பட்டது. இது பதின்மூன்று திருப்பாடல்களையுடையது. நெடுங்காலம் வாழ்க என வாழ்த்துதற் பொருளிலமைந்த இசைப்பாட்டினைப் பல்லாண்டிசை என்பர்.

" பாடுவார் பணிவார் பல்லாண்டிசை

கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத் தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூரம்மானே :

எனத் திருநாவுக்கரசடிகள் தம் காலத்துப் பல்லாண்டிசை பாடும் வழக்கமுண்டென்பதனை வெளியிட்டருளுதல் கான லாம். திருமாலடியார்களுள் ஒருவராகிய பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு இத்திருப்பல்லாண்டுடன் ஒப்பு