பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பன்னிரு திருமுறை வரலாறு


குதிரைச் சாத்தின் தலைவராய் வந்து தாம் கொணர்ந்த குதிரைகளின் இயல்புரைத்து அவற்றைத் திறம்பட நடத்திக் காட்டிக் கயிறுமாறிக் கொடுத்த குதிரைவீரர்க்கு விலைமதிக்க வொண்ணுத வெண்பட்டினைப் பாண்டியன் வரிசையாக நல் கிளுன். வாதவூரரைக் காத்தற்கு வந்த கடவுள் குதிரையில் இருந்திறங்கி அத்துளசினையேற்றுத் தன் முடியிற் சூடிக் கொண்டு வேதப்புரவியொடும் மறைந்தருளினர்.

பாண்டியனது குதிரைப்பந்தியிற் பிணிக்கப்பட்ட மாயக் குதிரைகளெல்லாம் இறைவனது அருள்விளையாட்டால் அன் றிரவே நரிகளாக மாறிப் பழைய குதிரைகளையும் கடித்துத் துன்புறுத்தி மதுரைநகரிற் கலக்கம் உண்டாக்கிக் காட்டிற்கு ஓடிப்போயின. அதனையுணர்ந்து சினமிக்க பாண்டியன் தன் அமைச்சராகிய வாதவூரரைப் பலவாறு இகழ்ந்துரைத்து வாதவூசணுகிய இவனைக் கொண்டுபோய்த் தண்டித்துப் பொருளை வாங்குமின் எனத் தண்டலாளரை ஏவிஞன். அரசனுல் ஏவப்பட்ட தண்டலாளர்கள், வாதவூரரைக் கொண்டுசென்று, நண்பகற்பொழுதிற் கடுவெயிலிலே ஞாயிற்றைப் பார்க்கும்படி நிறுத்தி, அவருடைய நெற்றி யிலும் கைகளிலும் கற்களேயேற்றித் துன்புறுத்தினர். அக் கொடுந்துயரைப் பொறுக்கமுடியாத வாதவூரர், குருவாக வந்து தம்மையாட்கொண்ட சிவபெருமானே நோக்கி அழுது அசற்றினர். அன்பராகிய அவரது துன்பத்தைத் துடைக்கக் கருதிய இறைவன், தன் சடைமீதுள்ள கங்கையை நோக்கி ஊழிக்காலத்துக் கடல்போன்று பெருகி வருக' எனப் பணித்தருள, வைகை நதியிற் பெருவெள்ள முண்டாகிக் கரைகடந்து மதுரை நகருட் புகுவதாயிற்று. மாணிக்க வாசகரை ஒறுத்த தண்டலாளர்கள், வெள்ளப்பெருக்கி லிருந்து தம் பொருள்களைப் பாதுகாத்துக்கொள்ள எண்ணித் தத்தம் வீடுநோக்கி விரைந்து சென்றனர். தண்டலாளர்கள் தம்மைவிட்டகன் றமைகண்ட வாதவூரர், திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று ஆலவாய் இறைவன் திருவடிகளை இறைஞ்சிப் போற்றி அப் பெருமானது திருவருளின்பத்தில் திளைத்து எழுதுசித்திரம் போன்று அசைவற்று இருந்தார்.

நரைமுதியாளாகிய வந்திக்குக் கூலியாளாக வந்தருளிய சோமசுந்தரக் கடவுள், வைகைக் கரைக்குச் சென்று வந்தியின் கூலியாள் என்று தம்மைக் கணக்கில் எழுதும்படி