பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

பன்னிரு திருமுறை வரலாறு


ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனரென்பவரும் இச்சேதி நாட்டையாண்ட குறுநில மன்னரேயாவர். இச்செய்தி,

  • தத்தா நமரேயெனச் சொல்லி வானுலகம் பெற்றவன் சேதிபன் மெய்ப்பொருளாமென்று பேசுவரே ' என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியால் நன்கு புலனும், திருவிசைப்பா ஆசிரியராகிய சேதிராயர் தாம் பாடிய தில்லைத் திருவிசைப்பாப் பதிகத்தின் திருக்கடைக் காப்பில் எழிற் சேதிபர்கோன் எனத் தம்மைக் குறிப் பிட்டுள்ளார். எனவே, இவ்வாசிரியர் சேதிநாடாகிய மலையமானட்டைத் திருக்கோவலூரிலிருந்து ஆண்ட குறுநில மன்னரென்பதும் செந்தமிழ்ப் புலமைமிக்க சிவநெறிச்செல்வர் என்பதும் நன்கு துணியப்படும். இவர் பாடியதாகத் திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே காணப்படுகின்றது. தில்லைக் கூத்தப்பெருமானைக் காத லித்த தலைவி, அப்பெருமானைக் காணப்பெரிதும் விரும்பி அவனை அடையப் பெருமையால் இளைத்து விம்மி விம்மி வெயிதுயிர்த்து அழுதலையும், அஞ்சலி கூப்பி அவனனிந்த கொன்றைமாலையை வேண்டி யிரத்தலையும், அவன் திருப் பெயரைக் கூறுகவென்று தன்னல் வளர்க்கப்பட்ட கிளியை வேண்டுவதனையும், அப்பெருமான முன்னிலைப் படுத்திக் கூறும் இனிய உரையாடல்களையும் அத்தலைவியைப் பெற்ற தாய் கொண்டு கூறி இறைவனை வேண்டுவதாக இத்திருப் பதிகம் பாடப்பெற்றுளது. இதன்கண் பத்துப்பாடல்கள் உள்ளன. இத்திருப்பதிகம் அந்தாதித் தொடையமையப் பாடப்பெற்றுள்ளது.

அறவனே அன்று பன்றிப்பின்போகிய மறவனே " எனத்தலைவி ஆண்டவ ையழைக்கும் முறையில் மறவனை யன்று பன்றிப்பின் சென்ற மாயன நால்வர்க்கு ஆலின் கீழுரைத்த அறவனை ' என வரும் சுந்தரர் தேவாரத் தொடர் எடுத்தாளப்படுதல் காணலாம்.

பெ Tఖáణ அறிதற்குரிய குறிப் துவும் இத்திருப்பதிகத்திற் கிடைக்கவில்லை. எனினும் கி. பி. பதினெராம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் இவரென்க் கொள்ளுதல் தவருகாது.

முதற் குலோத்துங்கன் காலத்திற்குமுன் சேதிராயர் என்ற பட்டத்துடன் மலையமான்கள் குறிக்கப்பட்டிலரென்