பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூல் நாயனர் வரலாறு 403

பரவிட்டு எனவும் ஈரிடத்தும் சென்றியையும்படி நம்பி யாண்டார் நம்பிகள் கூறியிருத்தலால், திருமூல நாயஞர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற் பொருள்களும் நிரம்பப்பெற்ற தமிழ் மறைகளையும் வடமொழி வேதங்களை யும் தழுவித் தமிழாகமம் எனப் போற்றப்படும் இத் திருமந்திரப் பனுவலை இயற்றியருளினர் என்னும் மெய்ம்மை இனிது புலகுைம். அம்மையப்பணுகிய சிவபெருமான் தமிழும் ஆரியமும் ஆகிய இரு மொழிகளிலும் ஒப்ப அமையும்படி ஞானநூற் பொருள்களை உமாதேவியார் கேட்கத் திருவாய்மலர்ந்தருளினன் என்பதனை,

மாரியுங் கோடையும் வார்பனி துரங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரியமுந் தமிழும் உடனே சொல்லிக் காரிகை யார்க்குக் கருணை செய்தானே. (திருமந்திரம் - 65) என வரும் திருப்பாடலில் திருமூல நாயனர் தெளிவாகக் குறித்துள்ளார். இக்குறிப்பினைக் கூர்ந்து தோக்குங்கால் முற்காலத்தில் இறைவனுல் அருளிச் செய்யப்பெற்ற சிவாகமங்கள் தமிழிலும் வடமொழியிலும் ஒப்ப அமைந் திருந்தன என்பது நன்கு விளங்கும். இவ்வாது இறைவ னிய்ல்பினை உலக மாந்தர் உணர்ந்து உய்தி பெறும் வண்ணம் தமிழிலும் வடமொழியிலும் இறைவனுரலாகிய அருள் நூல்கள் அமைந்திருந்தன என்பதனை,

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும் உணர்த்து மவனே யுனாலு மாமே. (திருமந்திரம் - 66) என ஆகமச் சிறப்புணர்த்தும் பகுதியில் ஆசிரியர் விளங்கக் கூறியுள்ளார். அன்றியும் திருமந்திரம் நாலாந் தந்திரத்துள் வயிரவி மந்திரம் என்ற பகுதியில்,

அந்த நடுவிரல் ஆதி சிறு விரல் வந்த வழிமுறை மாறி யுரை செய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி யிதனை நவமுரைத் தானே. (திருமந்திரம் - 1039) எனத் திருமூலர் அறிவுறுத்தியருளுதலால் அவ்வழிபாட்டுக் குரிய மந்திரம் வடமொழியில் மட்டுமன்றித் தமிழிலும் அமைந்திருந்தமை நன்கு தெளியப்படும். திருமந்திரம் அருளிய திருமூல நாயனர் தமது வரலாறு கூறுவதாக அமைந்த பாயிரப் பகுதியில்,