பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 பன்னிரு திருமுறை வரலாறு

இல்லத்திற்கு அழைத்துச் செல்லும், கருத்துடன் அவ ருடம்பினைத் தொடுதற்கு நெருங்கிள்ை. திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்ட வொண்ணுதவாறு தடுத்து நிறுத்தினர். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினுள். நும் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனுல் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்துவிட்டீர் என்று கூறிப் புலம்பி வாட்டமுற்ருள். அந்நிலையில் நிறைதவச் செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி, நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருத்தற் கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவ யோகத்து அமர்ந்திருந்தார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக்கண்ட மூலன் மனைவி, அதுபற்றி யாரிடத்தும் சொல்லாமலும் தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்ருள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோர்பால் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான் ருேர், திருமூலரையனுகி அவரது நிலைமையை நாடி, இது பித்தினுல் விளைந்த மயக்கமன்று; பேய் கோட்படுதல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்தவிகாரக் கலக்கங்களையெல்லாம் அறவேகளேந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமர்ந்துள்ளார். இந்நிலைமை யாவரா லும் அளந்தறிதற்கரியதாம் எனத் தெளிந்தனர். இவர் இருவகைப்பற்றுக்களை யும் அறுத்து ஞானுேபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கேயறியவல்ல முற்றுணர்வுடைய வராக விளங்குகின்ருர், ஆகவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்க்கையில் ஈடுபடுவார் அல்லர்’ என மூலன்மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள் அளவிலாத்துயரத்தால் மயக்கமுற்ருள். அருகேயுள்ளவர்கள் அவளைத்தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்ருர்கள், -