பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

墨盘6 பன்னிரு திருமுறை வரலாறு

காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் ஆவர். இச் செய்தி,

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனே டிந்த எழுவரும் என்வழியாமே. (திருமந்திரம் 69) எனவரும் பாடலால் அறியப்படும். மூலனுடலிற் புக்குத் திருமூலராயெழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை யொத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மை யும் உடையவராகத் தாம் திகழ்ந்த திறத்தினை,

நந்தியருளாலே மூலனை நாடிப்பின் நந்தியருளாலே சதாசிவ ஞயினேன் நந்தியருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் நந்தியருளாலே நானிருந்தேனே. (திருமந்திரம் 82)

எனவரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.

திருமூல நாயனுர் காலம்

கி. பி. எட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த அருளாசிரியர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடிய திருத் தொண்டத் தொகையில், நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” எனத் திருமூல நாயனுரைப் பெயர் குறித்துப் போற்றியிருத்தலாலும், கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த தேவார ஆசிரியர்களாகிய திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகிய பெருமக்கள் பாடியருளிய திருப்பதிகங்களில் திருமூலர் அருளிய திரு மந்திரப் பாடல்களின் சொற்ருெடர்களும் பொருள்களும் பலவிடங்களில் எடுத்தாளப்பட்டிருத்தலாலும் திருமந்திர மாலையின் ஆசிரியராகிய திருமூலநாயனரது காலம் கி. பி. நூற்ருண்டிற்கு முற்பட்டதாதல் நன்கு தெளியப்

鼠蚤鬣至。

நந்தியருள் பெற்ற நான்மறை யோகியார் மூல னுடம்பிற் புகுந்தபின் திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக்கொரு திருப் பாடலாக மூவாயிரந் திருமந்திரப்பாடல்களை அருளிச்