பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 垒盛器

மக்கள் வேண்டிய வேண்டியாங்கு எய்தற் பயத்த வாகிய இம் மந்திரங்கள், நம் நாட்டில் மக்களிடையே நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வந்துள்ளன என்பது, " கோவலன் நாவிற் கூறிய மந்திரம், பாய்கலைப்பாவை மந்திரமாதலின் காடுகாண் 196-7 எனவும், " அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும், வருமுறை யெழுத்தின் மந்திர மிரண்டும், ஒரு முறையாக வுளங்கொண் டோதி” (காடுகாண் 128-130) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களால் இனிது விளங்கும். இக் குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால், இத்தகைய தெய்வ மந்திரங்கள் பல உபதேச முறையில் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வந்துள்ளன என்பது இனிது புலனும், ஆகவே திருமூல நாயனரால் திருமந்திரம் நாலாந் தந்தி ரத்திற் குறிக்கப்பெற்றுள்ள இம் மந்திரங்கள் பலவும் தென்றமிழ் நாட்டில் வழங்கிய தொன் மையுடையன என் பது நன்கு துணியப்படும். இந் நூலாசிரியர் ஆரியமும் செந்தமிழும் கற்றுவல்ல சிவயோகியாராதலால் இமய முதல் குமரிவரையுள்ள நிலப்பகுதியில் வாழும் மக்களனை வர்க்கும் பயன்படும் முறையில் தமிழும் ஆரியமுமாகிய இருமொழி எழுத்துக்களும் விரவிய நிலையில் அகர முத லாகிய ஐம்பத்தோரெழுத்துக்களால் ஆகிய மந்திரங்களை இந்நூலில் வகுத்துக் கூறியுள்ளார். ந | ல ந் தந்திரத்திலுள்ள அதிகாரங்களிலமைந்த பாடல் களிற் பல அந்தாதித் தொடையமையப் பாடப்பெற்றுள்ளன. ஆயி னும், பல இடங்களில் பாட பேதங்களால் பாடல்கள் முன்பின் கை மாறி யெழுதப் பெற்ற மைய லும் இடைச் செருகலாகச் சில பாடல்கள் இடம் பெற்றமையாலும் இடையிடையே அவ்வந்தாதித் தொடர்புகன் சிதைந்தன எனக் கருத வேண்டியுளது.

ஐந்தாந் தந்திரம், சுத்த சைவம் முதலாக உட் சமயம் ஈருக இருபது உட் பிரிவுகளையுடையதாகும். இதன் கண் நால்வகைச் சைவங்களும், சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும், அவைபற்றி யமைந்த சன்மார்ககம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என்ற நெறிமுறைமைகளும், அந்நெறிகளில் நின்ருேர் பெறுதற்குரிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நால்வகைப் பேறுகளும், மந்தம், மந்த