பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 45%

என்னும் பொதுநிலையில் இறைவனுல் நிகழ்த்தப்பெறுந் திருக்கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக் கூத்து, பொற் றில் லேக்கூத்து, அற்புதக்கூத்து என்னும் தலைப்புக்களில் வைத்து இத் தந்திரத்தில் விரித்துரைக்கப்பெறுகின்றது.

இதன் கண் வரும் சூனியசம்பாஷணை என்ற பகுதி, உணர்தற் கரிய உயர்ந்த ஞான நுண்பொருள் களைக் கேட்போர் எளிதின் மனங்கொள்ளும் வண்ணம் உருவக வாய்பாட்டால் மறைத்துக் கூறும் மறைபொருட் கிளி விகள் ஆக அமைந்துளது. பொருள்களை ஆராய்ந்துபார்க்கும் அறிவுடைய ஆன்மாவின் உறையுளாகிய உடம்பின் கண்ணே உயிர்க்கு நற்பயன்தரும் அறிகருவிகளாகிய ஐம்பொறிகள் உள் ளன. அவை ஐந்தும் தம்மை நல் வழியிற் செலுத்தும் ஆசிரியனைப் பெருமையால் சிவபோத மாகிய வெறிகொண்டு புலன்களின் வழியே உழல்கின்றன. அவை, தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தவல்ல ஆசிரி யனைப் பெற்று அவனது உபதேசத்தின் வழி தற்போதம் அடங்கப் பெறின் அவை ஐந்தும் உயிர்க்குச் சிவஞான மாகிய பாலே நிரம்பத் தருவன என்னும் அரிய உண்மை யினை விளக்கும் விடுகதைபோன்று அமைந்தது,

பார்ப்பான் அகத்திலே டா ந் பசு ஐந்துண்டு

மேய்ப்பாரை யின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கிளு ற்

பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே. (2883) எனவரும் திருமந்திரமாகும். இதுபோன்று இப்பகுதியில் வரும்பாடல்கள் ஒப்பொடுபுணர்ந்த உவமம், தோன்றுவது கிளந்த துணிவு ஆகிய பிசி என்னும் செய்யுள் வகையினை ஒத்து அமைந்திருத்தல் காணலாம். இவ்வாறு மறை பொருட்கிளவிகளாக வரும் திருமந்திரப் பாடல்களுக்கு அநுபவம் உடைய நல்லறிஞர்களைக்கொண்டு தெளிவான முறையில் பொருள் விளக்கங் காணுதல் தமிழ்வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் ஆக்கந்தரும் நற்பணியாகும்.

இவ் ஒன்பதாந் தந்திரத்தின் இறுதியிலமைந்த வரை யுறைமாட்சி, அணைந்தோர்.தன்மை, தோத்திரம், சர்வ வியாபி என்னுந் தலைப்புக்களில் உள்ள திருமந்திரப் பாடல் கள், பசுகரணங்களெல்லாம் சிவகரணங்களாகப் பெற்றுச் சிவபோகத்தில் திளைத் தின்புறும் அருளாளர்கள் ஆகிய சீவன் முத்தர்களது இயல்பின இனிது புலப்படுத்து வனவாகும்.