பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும் 479

வெஞ்சின வேழமுண்ட விளங்கனிபோன்று (சீவக 1122) எனத் திருத்தக்கதேவர் எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

திருமந்திரமும் மெய்கண்ட நூல்களும்

திருமூலர் அருளிய திருமந்திரம் சைவ சித்தாந்தத் தத்துவ உண்மைகளை விளக்கும் சாத்திர நூலாகவும், சைவ நெறியில் நின்று சிவபரம்பொருளை மனமொழி மெய் களால் சிந்தித்து வாழ்த்தி வழிபடுதற்குச் சாதனமாகிய தோத்திர நூலாகவும் விளங்கும் தனிச்சிறப்புடையதாகும். தத்துவ உண்மைகளை விளக்கும் நிலையில் பிற்காலத்துத் தோன்றிய சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட நூல்கள் பதின்ைகிற்கும் முதல் நூலாக விளங்குவது இத்திருமந் திரமேயாகும். என்றும் மாரு நிலை யினதாகிய மெய்ப் பொருளை மாறுந்தன்மையனவாகிய ஏனையபொருள் களி னின்றும் பிரித்துக்காணும் மெய்யுணர்வினை வழங்க வல்லவை சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்களா தலின் இவை மெய்கண்ட நூல்கள் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுவனவாயின.

சிவஞானம் பெற்ற உயிர், தன் உடம்பையும் கருவி கரணங்களையும் ஏனைய தத்துவங்களையும் தன்னின் வேருகப் பகுத்துணர்ந்து என்றும் மாரு துள்ள சிவபரம் பொருளே மெய்ப்பொருளெனக் கண்டு தெளியுமாயின், அது மெய்கண்டது எனச் சிறப்பித்துப் பாராட்டப்பெறும். இந்நுட்பம்,

மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத் தவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வா யுயிரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலா நிறை எங்குமெய் கண்டதே.

(திருமந்திரம் - 2586) என வரும் திருமந்திரத்தால் உய்த்துணரப்படும். இத்திருப் பாடற்பொருளை அடியொற்றியமைந்தது,

பன்னிறங் காட்டும் படிகம்போல் இந்திரியம் தன்னிறமே காட்டுந் தகை நினைந்து - பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான் மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு

(சிவஞானபோதம் வெண்பா - 30) எனவரும் சிவஞானபோத வெண்பாவாகும்.