பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 器剑

திருவிளையாட்டெல்லாம் எடுத்துரைத்தார்கள். அவ்வருட் செயலைக் கேட்டு நெஞ்சம் நெக்குருகிய வாதவூரர், அவ்வதி காரிகளை நோக்கி இறைவன் மண் சுமந்து விளையாடிய இடத்தை எமக்குக் காட்டுவீராக என்று சொல்லி, அவர் களுடன் அவ்விடத்தை யடைந்து, நிலமிசை விழுந்து புரண்டு அலறி இறைவனது கருணைத் திறத்தை நினைந்து இரங்கினர்; யாவர்க்கும் மேலாம் இறைவனைப் பணி கொண்ட தமது பிழையை நினைந்து பலவாறு புலம்பினர் வைகை யாறும் வடிந்தது. இச்செய்தியெல்லாம் அறிந்த பாண்டி யன், வாதவூரடிகளை யடைந்து வணங்கித் தனது பிழை யைப் பொறுத்தருளுமாறு வேண்டினன். யான் நாளும் நுமது பணி செய்தொழுக இந்நாட்டின் ஆட்சியைத் தாங் களே ஏற்று நடத்தல் வேண்டும் என மன்னன் குறை யிரந்து நின்ருன் அரசனது அன்பினையுணர்ந்த வாத வூரடிகள் ' என்னைத் திருப்பெருந்துறைக்குச் செல்ல விடுப் பதே இவ்வுலக ஆட்சியை எனக்கு வழங்கியதாகும்’ என்ருர், அடிகளது சிவபத்தியின் மாண்பினை யுணர்ந்த மன்னன் பெரியீர் நும் திருவுளப்படி செய்மின் எனக்கூறி அவர் பால் விடைபெற்றுத் தனது அரண்மனையை யடைந்தான்.

நம்பனுக்கு அன்பு பூண்ட வாதவூரர், நற்றவக் கோலங் கொண்டார்; தமக்கு மெய்யுணர்வளித்து ஆட்கொண்டரு ளிய ஆசிரியப் பெருமானைக் கண்டிறைஞ்ச விரும்பி, மதுரை யினின்றும் புறப்பட்டுத் திருப்பெருந்துறையை யடைந்து குருநாதர் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சினர். அடியார் சூழ ஆசிரியத் திருமேனி கொண்டெழுந்தருளிய இறைவர். வாதவூரடிகளுக்குத் திருநீறு தரித்து அருட்பார்வை நல்கி ஞர். தம்மைச் சூழ்ந்துள்ள அடியார்களை நோக்கி நாம் நினைத்து வந்த கருமமெல்லாம் இனிது முடித்தனம். கயிலையிலுள்ள நம் தொண்டர்கள் நமது திருமேனி யைத் தரிசிக்க விரும்பி நம்மை அன்புடன் தியானிக் கின்றனர். ஆதலால் யாம் அங்குச் செல்லுதல் வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியுடன் இங்கு வாழ்ந்திருப்பீராக! எனத் திருவாய் மலர்ந்தருளினுர். தொண்டர்களெல்லாம் இறைவன் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சித் தேசத்திர செய்து எம்பெருமானே, நினது பிரிவைத் தரித்திருக்கு ஆற்றலுடையோமல்லோம். எம்ஆன் ஆகிவிடு என அழுதரற்றிஞர்கள். அை 鑿