பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் వీ2ణ్ణి

பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை, வேந்தன் அரு ளாலே விரித்த பாடல் இவை என வரும் இதன் திருக் கடைக் காப்புப் பகுதியாலும் இனிது புலன கும். திருவா லங்காட்டுப் பெருமான் தனது தூக்கிய திருவடிக் கீழமர்ந்து தாழ்ந்து வணங்குஞ் சிறப்புடைத் தொண்ட ராகிய காரைக்காலம்மையார் நாடோறும் பாடிப் போற்றும் தோத்திரப் பாடல்களையும் வாழ்த்தினையும் கேட்டு அப் பாடல்களின் இசைக்குத்தக அண்டமுற நிமிர்ந்தாடு கின்ருன் என்னும் உண்மையினை,

" வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும்

வாழ்த்துங் கேட்டு அணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே ! என வரும் தொடரால் திருஞானசம்பந்தர் குறிப்பிட்டருளிய திறம் நினைந்த போற்றத் தக்கதாகும். இச் செய்தி அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழிருக்க 2 என அம்மையார் வேண்டிய வேண்டுகோளாலும் குலவிய தாண்டவத்தில் அவர் எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்று மிருக்கின் ருர் ' எனச் சேக்கிழாரடிகள் கூறிப் போற்றுத லாலும் நன்கு துணியப்படும்.

மேற்காட்டிய வரலாற்றுக் குறிப்பால் திருஞான சம்

பந்தர்க்குக் காலத்தால் முற்பட்டவர் காரைக்காலம்மையா ரென்பது நன்கு தெளியப்படும். சைவ சமய குரவருளொரு வராகிய திருஞானசம்பந்தர் கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்தவரென்பது வரலாற்ருராய்ச்சியாளர் துணிபாதலின் அவராற் போற்றப் பெற்ற காரைக் காலம்மையார் வாழ்ந்த காலம் அவர்க்கு நெடுங்காலத்திற்கு முன் எனக் கொள்ளுதல் வேண்டும். காரைக்காலம்மையார் பாடிய நூல்களின் யாப்பமைதியையும் பின்வந்த தேவார ஆசிரி யர்கள் பாடிய திருமுறைகளின் சொற்பொருள மைதியையும் உற்றுநோக்குங்கால் இருண்ட காலப் பகுதி யெனப்படும் கி. பி. நான்கு, ஐந்தாம் நூற்ருண்டுகளாகிய காலப்பகுதி யில் வாழ்ந்தவர் காரைக்காலம்மையாரெனக் கொள்ளுதல் மிகவும் பொருந்தும்.

1. திருஞானசம்பந்தர் முதல் திருமுறை 45-ம் பதிகம் 7-ம் Lê Ř – Sc},

2. பெரிய, காரைக்காலம்மையார் புராணம் 50-ம் செய்யுள்,

3. 3} 努 65-ம் செய்யுள்.

34