பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்காலம்மையார் 531

காரைக்காலம்மையாரேயாவார். ஆகவே அம்மையார் திருவாய்மலர்ந்தருளிய இயலிசைத் தமிழ்ப் பதிகங்களாகிய திருவாலங்காட்டுத் திருப்பதிகங்களிரண்டும் மூத்ததிருப் பதிகங்கள் என வழங்கப்பெறுவனவாயின.

சிவபெருமானைப் போற்றும் நற்கணத்திலொருவராகிய காரைக்காலம்மையார் ஆலங்காட்டிறைவன் ஈமம் இடு சுடு காட்டகத்தே தாழ்சடையெட்டுத் திசையும் வீசி ஆடியரு ளுந்திருக்கூத்தின் இயல்பினையும் அண்டமுற நிமிர்ந் தாடும் அப்பெருமானுக்கு ஆடரங்காகத்திகழும் சுடுகாட் டின் அமைதியையும் அங்கு வாழும் பேய்களின் செய்கை களையும் இத்திருப்பதிகங்களிற் சுவை பெற விரித்துரைக் கின்ருர்,

ஊழ்வயத்தால் இறந்த உயிர்கள் உள்ளங் குளிர்ந்து அமைதியடையும்படி உயிர்க்குயிராகிய சிவபெருமான் இடு காட்டில் ஆடியருள்கின்ருன் என்பது, ஈமம் இடு சுடுகாட்ட கத்தே ஆகங்குளிர்ந்தனலாடும் எங்கள் அப்பன் என அம்மையார் இறைவனைப் போற்றுதலாற் புலம்ை. திரு வாலங்காட்டிறைவன் காளியுடன் நிருத்தவாதஞ் செய்து ஆடியருளிய ஊர்த்துவ தாண்டவத்தின் இயல்பினை, மண்டலம் நின்று அங்குளானம் இட்டு வாதித்து வீசி யெடுத்த பாதம், அண்டமுற நிமிர்ந்தாடும் எங்கள் அப்ப னிடம் திருவாலங்காடே என்ற தொடரால் அம்மையார் புலப்படுத்தினமை காணலாம்.

காடும் கடலும் மலேயும் மண்ணும் விண்ணுஞ்சுழல அனல் கையேந்தி ஆடும் அரவப் புயங்கன் என்றும், பேய் முழவங் கொட்டக் கூளிப்பாடக் குழகன் ஆடும் . என்றும், ஆலங்காட்டிறைவனது திருநடனத்தின் இயல் பினை விளக்கிய அம்மையார், மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே என்ற தொடராற் பிற ரெவருங் காண முடியாத இறைவனது அருட்கூத்தினை மலைமகளாராகிய உமையம்மையாரது திருவருள் நோக்கத்

1. திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகம் க-3-ம் பாடல்.

i. 除外 , 4-ம் பாடல்

盛, * * , 8-ம் பாடல்

3 势变 if i-th uru-si.

4. $ ) , 8-ம் பாடல்