பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 霹镑

ச்ெவியில் அச்சொல் புகவில்லை. பின் அடிகள் தம்முணர்வு வரப்பெற்றுச் சிவ சிவபோற்றி ' எனத்தில்லையம்பலவனே வழிபட்டு வலம் வந்து திருப்புவீச்சரம், திருநாகேச்சரம் (அனந்திசம்) ஆகிய திருக்கோயில்களை இறைஞ்சித் தில்லைத்திருவீதியை வலம் வரும்போது குலாப்பத்து, கோயிற்றிருப்பதிகம், கோயில் மூத்ததிருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திரு அண்டப்பகுதி, போற்றித்திருவகவல் என்பவற்றைப் பாடினர். மாதர்கள் நறுமணப்பொடியாகிய சுண்ணம் இடிக்குங்கால் அவர்கள் கூறுவதாகத் திருப்பொற் சுண்ணம் பாடினர். அருகேயுள்ள சோலையிற் சென்று விளையாடும் சிறுமியர்களின் பலவகை விளையாடல்களைக் கண்டு, அங்ங்னம் விளையாடு மகளிர் பயனற்ற சொற்களை நீக்கி எம்பெருமாளுகிய இறைவனைப் பாடுமின் எனத் தமக்குள் உரையாடும் நிலையில் திருத்தெள்ளேனம், திருவுந்தியார், திருத்தோணுேக்கம், திருப்பூவல்லி, திருப் பெர்ன்னுரசல் ஆகிய பனுவல்களைப் பாடிப்போற்றிஞர். அன்னைப்பத்து, திருக்கோத்தும்பி, குயிற்பத்து, திருத் தசாங்கம், அச்சப்பத்து, ஆகிய செழும் பாடல்களைப் பாடித் தில்லைநகர்ப் புறத்திலே இலக்குடில் (பன்னசாலை) அமைத்து அதன் கண் அமர்ந்திருந்தார்.

இவர் இங்ங்ணமிருக்க, சிவனடித்தொண்டு பூண்ட அருத்தவரொருவர், சோழநாட்டுத் தலங்களை வணங்கித் தில்லைப் பொன்னம்பலத்தைக் கண் குளிரக் கண்டிறைஞ்சி ஈழநாட்டை யடைந்தார். தில்லைச் சிற்றம்பலத்தின் பெருமையை யுணர்ந்த அவ்வடியவர், செல்லுமிடந்தோறும் பொன்னம்பலம் என்று கூறுதலே வழக்கமாகக் கொண்டிருந் தார். அவரது இயல்பினைக்கண்டு பொருத புத்தர்கள், தம் வேந்தளுகிய ஈழமன்னனைக் கண்டு முறையிட்டர்ர்கள். மன்னன், அவ்வடியவரை அழைத்துவம்மின் என்ருன். அரசனது ஏவலால் அழைக்கப்பெற்ற சிவனடியார், அரசன் முன்னிலையில் பொன்னம்பலம்’ என்று கூறி அமர்ந்தார். அச்சொல்லின் சிறப்புயாது ' என மன்னன் வினவிஞன். சிவனடியாராகிய அவர், சிவபெருமான் உமையம்மை காணத் திருநடம்புரியும் தில்லைச் சிற்றம்பலத்தின் சிறப்பினை விரித் துரைத்து ஒருமுறை பொன்னம்பலம் என்று சொன்னவர் திருவைந்தெழுத்தை இருபத்தோராயிரத்து அறுநூறுமுறை ஒதிய பயனைப்பெறுவர் எனக் கூறிமுடித்தார். அதுகேட்டு