பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயனர் §5?

என்பது வரலாறு. இவ்வாறு ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் சிவபெருமான் எழுந்தருளியிருக்குந் திருத்தலங் களைப் போற்றிப் பரவிய இனிய தமிழ் வெண்பாக்களின் தொகுதியே கூேடித்திரத் திருவெண்பா என்ற பிரபந்த மாகும். உலமக்களுக்கு அருள் புரிதற் பொருட்டு இறை வன் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சிவ தலங்கள் யாவும் மேலான வீட்டுலகமாக விளங்கும் மெய்ம் மையை அறிவுறுத்தும் வெண்பாக்களால் இயன்றமை யால் இந்நூல் கேஷத்திரத் திருவெண்பா என வழங்கப் பெறுவதாயிற்று. வேந்தர் பெரு மானுகவும் சிறந்த செந் தமிழ்ப் புலவராகவும் விளங்கிய இவ்வாசிரியர், தமிழ்நாட்டி லுள்ள திருத்தலங்கள் பலவற்றையும் நேரிற் கண்டு வெண்பா மலர்களால் அருச்சித்துப் போற்றியிருத்தல் கூடுமாதலின் இவராற் பாடப்பெற்ற திருப்பாடல்கள் நூற்றுக் கணக்கின வெனக்கொள்ள இடமுண்டு. எனி னும் இவர் பாடியனவாக இப்பொழுது இருபத்து நான்கு வெண்பாக்களே கிடைத்துள்ளன. எஞ்சிய பாடல்கள் தமிழ் மக்களது விழிப்பின்மையால் பேணப்படாது மறைந் தன போலும்.

சிவபெருமான் திருக்கோயில் கொண்டு வீற்றிருந்து அருள் வழங்குஞ் சிறப்புடைய திருத்தலங்களை நெஞ்சில்ை நிகன ந்து வாயில்ை வாழ்த்தியும் அடைந்து மெய்யில்ை தொண்டு புரிந்தும் போற்று முகமாகப் பிற வித் துயர் நீங்கி இறைவன் திருவடிகளைச் சார்ந்து இன்புறலாமென்பது கூேடித்திரத் திருவெண்பாக்களிலமைந்த திரண்ட கருத் தாகும். மறவாத பேரன்பினுல் இறைவனது திருவருள் ஞானத்தால் சிவானந்த அநுபூதியைத் தலைப்பட்ட மெய் யடியார்கள் சிவ வேடத்தையும் திருக்கோயில்களையும் சிவ னெனவே தெளிந்து வழிபடுவரென்பதற்குச் சிவாலயங்க ளமைந்த திருத்தலங்களைப் பாடிப் பரவிய ஐயடிகள் காட வர்கோன் நாயனுர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்ருர், இவராற் பாடப்பெற்ற வெண்பாக்கள் யாவும் யாக்கை நிலையாமையையும் இளமை நிலையாமையையும் செல்வம் நிலையாமையையும் நன்கு வற்புறுத்துவனவாகவும், நோயி - 1. சத்தித் தடக்கைக் குமரனற் ருதை தன் தானமெல்லாம்

முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து '

என்பர் நம்பியாண்டார் நம்பிகள்.