பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுர்

5

5

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்

டெஞ்சாமை பெற்றிடினும் யான் வேண் டேன்.--நஞ்சங்

கரந்துண்ட கண்டர் தம் ஒற்றியூர் பற்றி

இாந்துண் டிருக்கப் பெறின்.

என்ற திருவெண்பாவாகும். காடவர் கோளுகிய இவ் வேந்தர் பெருமான், தம் வாழ்நாளின் பிற்பகுதியில் அரச பதவியினைத் துறந்து இறைவனைப் போற்றியவரென்பது இத் திருப்பாடலால் நன்கு புலனுதல் காணலாம். பல யுகங்கள் அரச பதவியில் வீற்றிருந்து பெறும் எல்லாச் செல்வங்களையும் இறைவனது பொருள் சேர் புகழ்ப் பாடலைக் கேட்டு மகிழுங் கண நேரமே விளைவிக்க வல்ல தென்பதை,

நூற்றனைத்தோர் பல்லூழி நுண் வயி வெண்குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம் விளையாதே.--கூற்றுதைத்தான் ஆடாவங் கச்சா அசைக்கசைத்த அம்மான்றன் பாட ரவங் கேட்ட பகல்.

என்ற பாடலில் ஐயடிகள் வியந்து போற்றியுள்ளார். இதன்கண் பகல் விள யாதே எனக் கொண்டு கூட்டி, விளை யாதே என்பதற்கு விளக்கவல்ல தல்லவா ? எனப் பொரு ளுரைத்தல் வேண்டும். ஈண்டு பகலென்றது நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் ' என் புழிப் போலக் கணப் பொழுது என்ற பொருளில் வழங்கியதாகும். இறைவனது பொருள் சேர் புகழ்ப்பாடலைச் செவி மடுத்தலில் ஐயடிகள் காடவளுர்க்குள்ள தணியாக் காதலை இத் திருப்பாடல் இனிது புலப்படுத்துதல் காண்க. இங்ங் ைமே கூேடித்திரத் திருவெண்பாவாகிய இப் பிரபந்தத்திலமைந்த ஒவ்வொரு பாடலும் இப் பிரபந்தத்தைப் பாடிய ஐயடிகளது உலக அநுபவத்தினை யும் அவர் பெற்ற மெய்யுணர்வினையும் ஒருங்கு விளக்குவனவாக அமைந்துள்ளன.

4. சேரமான் பெருமாள் நாயஞர்

கார் கொண்ட கொடைக் கழழிற்றறிவார்க்கும் அடி யேன் என நம்பியா குசராற் போற்றப் பெற்ற இப்பெரியார், தம் தோழராகிய நயபியாரூரருடன் திருக்கயிலை சார்ந்தவ ரென்பதும், பாண பத்திரர் பொருட்டுத் திருவாலவாயுடை யார் பாடியருளிய திருமுகப்பாசுரத்தைப் பெற்றுப்