பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

பன்னிரு திருமுறை வரலாறு


நிலத்துயிர் கழறுஞ்சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், அ. சுரிமையை யேற்று நடத்துதல் தாம்மேற்கொண்ட சிவத்தொண்டிற்கு தடைவிளைப்பதெனினும் தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சிபுரிதல் வேண்டு மென்பது சிவபெருமான் திருவுள் ளக் கருத்தாதலை உணர்ந்து திருவஞ்சைக்களத்திறைவனை வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினர். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வேண்டு வனசெய்ய உரிய நன்ளிைல் திருமுடி சூடி இவ்வுலகத்தை யும் சிந்தைசெல்லாச் சேனெடுந்துாரத்து அந்தமில் இன்பம் வழங்கும் மறுமையுலகத்தையும ஒருசேர ஆட்சி புரியும் பெருவேந்தராயினர். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனுர், திருவஞ்சைக் களத் திருக்கோயிலே வலம்வந்து வணங்கிப் பட்ட த்து யானைமீது அமர்ந்து கொற்றக்குடையும் வெண்சாமரையும் பரிசனங் கள் தாங்கிவர, நகரில் திருவுலாப் போந்தபோது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்துகொண்டு வரும் வண்ணுன் ஒருவன் கண்ணெதிர்ப்பட்டான். மழையில் நனைந்துவந்த அவனது சரீரம் உவர்மண் படிந்து வெளுந்திருத்தமையால் உடல் முழுதுந் திருநீறு பூசிய சிவனடியார் வேடத்தைப் போன்று விளங்கியது, அதனைச் சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையி னின்றும் இறங்கிச்சென்று வண்ணுனை வணங்கினர். அரசர் பெருமான் தன்னை வணங்கக்கன் டு சிந்தை கலங்கி அச்சமுற்ற வண்ணுன், சேரமானப் பணிந்து அடியேன் தங்கள் அடித்தொழில் புரியும் வண்ணுன் என்ருன். அது கேட்ட சேரர் பிரான் அடியேன் அடிச்சேரன் காதலாற் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக ' என அவ் வன்னனுக்குத் தேறுதலுரை பகர்ந்து அனுப்புவாராயினர். இச்செய்தி,

மன்னர் பிரானெதிர் வண்ணு னுடலுவர் ஊறி நீருர்

தன்னர் பிரான்ற மர் போல வருதலுந் தான் வணங்க

என்னர் பிரான் அடி வண்ணுன் என அடிச் சேர னெனு ந்

தென்னர் பிரான் கழறிற்றறி வானெனுஞ் சேரலனே. எ ன வ ரு ந் திருத்தொண்டர் திருவந்தாதியாலும் 'வண்ணுனைக் கும்பிட்டார்’ எனச் சேரமான் பெருமாளுக்கு வழங்கும் பெயராலும் நன்கு துணியப்படும்.