பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 571.

தலைவியின் பெயர் சுட்ட படாமையால் சுட்டி யொருவர் பெயர் கொளப்படாத அகன ந் திணை யெனவே கொள்ளப் படும் சிறப்புடைத்தெனவும், கடவுள் மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்தபக்கமெனப்படும் காமப் பகுதி மக்கள் நுதலிய தல்லாமையாலும் சுட்டியொருவர் பெயர் கொளளப்படுதலானும் அக்துணைச் சிறப்புடைத்தன் றென வும் கருதிய தேவார ஆசிரியர்கள், எல்லாம் வல்ல இறை வனைத் தலைவனுகவும் அவனது திருவடியைத் தலைப்பட்டுப் பிரிவறநிறுை இன்புறுதற்குரிய உயிர்களாகிய தம்மை அவனருள் வேட்ட தலைவியாகவும் கொண்டு உளமுருகிப் பாடிய செழும்பாடல்கள் இன்பமும் பொருளும் அறனும் என் ருங்கு அன் பொடு புணர்ந்த அகனைந்தினையின் முடிந்த பொருளாய்ச் சிறந்தது பயிற்றலாகிய உயர்ந்த பேரின்பத்தை வழங்கும் இலக்கியமாகத் திகழ்கின்றன. இவ்வாறு தேவசர ஆசிரியர்கள் வகுத்துக்காட்டிய அன்பு நெறியை உளத்து ட்கொண்டு சேரமான் பெருமாள் நாய னுர் இறைவனைத் தலைவனுகவும் அவனருள் வேட்ட உயிரைத் தலைவியாகவும் கொண்டுபாடிய அகத்துறைப் பாடல்கள் பொன் வண்ணத் தந்தாதியில் நாற்பதுக்குமேல் உள்ளன. இவையக வும் இளம் பூரணர் கருத்துப்படி கடவுள் மாட்டு மானிடப் பெண்டிச் நயந்த பக்கம் என்ற வகையில் அடங்குவனவாகும்.

நிலவுலகமே திருவடியாகவும், ஞாயிறு திங்கள் தீ யென்னுஞ் சுடர்கள் கண் இளாகவும், இடை விடாது வீசுங் காற்று உயிர்ப்பா வும், அலையோங்கிய பெருங்கடல் ஆடை யாகவும், அண்டமுகடு தி இமுடியாகவும், அருமறைகள் திருமுகங்கள் எகவும், எண் தி சைகள் தோள் களாகவும், உலகத்து வழங்கும் பலமொழிகளும் இன்னிசைப் பாடலாக வும், தின் கண் அமைய விளங்குவது, சிவபெருமானது பேருருவமாகும். யாவராலும் காண்டற் கசியதும் அடைதற் கரியதும் ஆகிய பேருருவமுடைய சிவபெருமானைக் காதலித்து வருந்தும் தன் மகளது எளிமைத் தன்மையை நினைந்து நற்ருய் இாங்குவதாக அமைந்தது,

பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்போங் கோதம் உடுக்கை யுயர் வான் முடிவிசும்பே யுடம்பு வேத முகந்திசை தோள் மிகு பன்மொழி கீதமென் ன போத மிவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே. (1.9) என்ற பாடலாகும். இத்திருப்பாடற் பொருள்,