பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

பன்னிரு திருமுறை வரலாறு


மாநிலஞ் சேவடி யாகத் து நீர் வளை நரல் பவ்வம் உடுக்கையாக விசும்புமெய் யாகத் திசைகையாகப் படர் கதிர் மதியமொடு சுடர் கண் ணுக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரியோனே.

(நற்றினை, கடவுள் வாழ்த்து)

எனவரும் பெருந்தேவனர் பாடற் பொருளுடன் ஒத்து விளங்குதல் அறிந்து இன் புறத்தக்கதாகும்.

இறைவனது பேரழகில் ஈடுபட்ட தலைவி யொருத்தி அப்பெருமானையே இரவும் பகலும் இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருப்பவள் காமவேள் அம்பினல் தான் படுந் துயரத்தை எடுத்துரைத்து வருந்துவதாக அமைந்தது,

எண்ணம் இறையே பிழைக்குங்கொலாம்

இமையோரிறைஞ்சு ந் தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக்குழையன் வந்தென் உள் நன்குறைவ தறிந்தும் ஒளிம நிறங்கவர்வான் கண் ணு முறங்கா திராப்பக லெய்கின்ற காமனுக்கே. (44)

என்ற பாடலாகும். காமனைக் காய்ந்த பெருமாளுகிய சங்கரன் என்னுள்ளத்தில் இடைவிடா தெழுந்தருளி யிருத்தலைத் தெரிந்திருந்தும் அப்பெருமான் பாற் சார்பு டைய என்மேல் இரவும் பகலும் காமன் அம்பினைச் சொரிந்து நிற்கின் ருன். அவன் இங்ங்னம் என்.ால் தீமை செய்தொழுகுதலின் காரணம் பெண்ணுகிய என்னைத் தப்பியுய்யலாம் என்ற எண்ணத்தினுற் போலும். தன்னை யடைந்தார் துயர் தீர்த்தருளும் எம்பெருமானது ஒறுத்த லுக்கு இலக்காகாது காமனுகிய இவன் உய்தல் கூடுமோ? எனத் தலைவி அவனை அச்சுறுத்துங் குறிப்பு இப் பாடலிற் புலளுதல் காண்க.

இறைவன் தாருகாவனத்து முனிவர் மகளிர் காமுற்று மயங்க ஒடேந்து செல்வராகப் பிச்சைக்குச் சென்ற பொழுது அப்பெருமான் மேற்கொண்ட பிச்சைக் கோலத் தின் பேரழகில் ஈடுபட்ட தலைவி அத்திருக்கோலத்தையே இடைவிடாது எண்ணுகின்ருள். இறைவன் தன் பாற் பிச்சை யேற்க வருவது போலவும் தான் அவனது பேரழகி