பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

பன்னிரு திருமுறை வரலாறு


தலைமகளது ஆற்ருமை கண்ட தோழி இறைவனை நோக்கி உரையாடுவதாக அமைந்தது,

தறித்தாய் அயன் றலை சாய்த்தாய் சலந்தானத் தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம் புனலுஞ்சடைமேற் செறித்தாய்க் கிவைபுக ழாகின்ற கண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி யாகுங்கொலா மென்று பாவிப்பனே. (81) என்ற பாடலாகும். பிரமனது தலையை அரிந்தாய். சலந் தரனை அழித்தாய். காமனை எரித் தாய், முப்புரங்களையும் சுட்டு நீருககிய்ை. கங்கையாகிய பெருவெள்ளத்தின் வேகத்தைக் குறைத்து அதனை நினது சடையில் அடக்கிய்ை. நீ செயத ஒறுத்தலாகிய இச் செயல்கள் நினக்குப் புகழ் விளைப்பனவாக உலகத்தாரால் நன்கு மதிக்கப்படுதலைக் கண்டு, மேலும் இத்தகைய ஒறுத்தற் ருெழிலாற புகழ் பெறுதலேயே விரும்பி நின்னருளுக்குரிய ளாகிய இத் தலைவியின் சிலவாகிய வளைகளையும் பறித்துக் கொண்ட ய் போலும். நின்பால் அன்புடையாள்பால் நீ செய்த இச்செயல் பொருள் சேர் புகழாளனுகிய நினக்குப் பழி விளைவிப்பதாகுமே எனச் சிற்றறிவுடைய யான் எண்ணுகின்றேன்' என இறைவனை நோக்கித் தோழி கயம்பெற உரையாடிய திறம் நினைந்து மகிழத்தக்கதாகும்.

தலைமகளுக்கு உற்ற நோயை யறிந்து தணிக்க எண்ணிய தோழியை நோக்கித் தலைவி தான் உற்ற துயரைப் புலப்படுத்துவதாக அமைந்தது,

செறிவளேயாய் நீவிரையல் குல நலங் கல்விமெய்யாம் இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோருமேத்தும் நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பாற் கறைவளர் கண்டனைக் காணப்பெரிதுங் கலங்கியதே. {85)

என்ற பாடலாகும். செறிந்த வளையலணிந்த தோழியே! குடிப்பிறப்பு, நல்லொழுக்கம், கல்வி, வாய்மை ஆகிய நற் பண்புகளுக்கெல்லாம் நிலைக்களமாகத் திகழ்வது எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனுடைய தாமரை மலர்போலுந் திருவடியே யெனப் பெரியோர் பலரும் போற்றிப் புகழும் நிறையுடைமையில் நிலைபெற்றுள் ள எனது நெஞ்சம், என் ஆருயிர் நாயகனுகிய நீலகண்டமுடைய பெருமானைத் தாம் விரும்பியனவற்றை விரும்பிய வண்ணஞ் செய்தொழு கும் நிமித்திகன் முதலிய கீழ்மக்களது முயற்சியாற் காண முயலும் அன்னையின் செயல் கண்டு மிகவுங் கலக்கமடை