பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620

பன்னிரு திருமுறை வரலாறு


நக்கீரர் நாயினுங்கடையேன் அறியாமையாற் கூறிய வற்றைப் பொறுத்தருள வேண்டும் என இறைவனைப் பணிந்து வேண்டினர். உளமிரங்கிய இறைவனும் நீ கயிலையைக்கண்டு வணங்கினல் இந்நோய் தீரும் ' எனச் சொல்லி மறைந்தன ன். குட்ட நோயினுல் வருத்தமுறும் நக்கீரர் கயிலையைக்கண்டு தம் நோயைத் தீர்ததுக் கொள்ள எண்ணி மதுரையிற் சங்கப் புலவர் பால் விடை பெற்றுப் பல தலங்களை வணங்கி வடநாடு சென்று கங்கையில் நீராடிக் காசி, கேதாரம் முதலிய தலங்களை இறைஞ்சி உள் ளங்கால் வெள்ளெலும்பு தேயக் கயிலையை நோக்கிச் சென்ருர் வானவராலும் அடைதற் கரிய கயிலையை நோக்கிச் செல்லும் நக்கீரர், வழியிடையமைந்த தடாக மொன்றைக்கண்டு அதன் க ையிலுள்ள ஆலமரத் தின் நிழலிற் சிறிது நேரம் இளப்பாறுவாராயினர். அந் நிலையில் அவ்வலமரத்திலிருந்து உதிரும் இல யொன்று ஒருபாதி நீரிலும் மற்றெரு பாதி நிலத்திலு மாக விழுந்தது. நீரிற்படி ந்த இலைப்பகுதி மீனுகவும் நிலத்திற் படிந்தபா.தி பறவையாகவும் மாறி ஒன்றை யொன்று இழுத்தலே க்கும் விநோதத்தைக் கண்ட நக்கீரர், அவ்வதிசயக் காட்சியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். அந்நிலையில் அங்குள்ள பூதமொன்று விரைத்துவந்து நக்கீர சைப் பிடித் துச் சென்று தான் முன் மலைமுழையொன் றிற் சிறைப்படுத்தியுள்ள தொளாயிரத்துத் தொண்னு ற் ருென்பதின்மருடன் இவரையும் சிறைபிட்டு இல் வாயிர வரையும் ஒருசேர வுண்ணுங் கருத்தினுல் நீராடி வரச் சென்றது. மலைமுழையில் முன்னரே சிறைப்பட்டிருந்த வர்கள், தம்முன் புதியசாய் வந்த நக்கீரரை நோக்கி, நீயொருவன் இங்கு வந்தமையால் அல் லவோ நாங்கள் ஆயிரவ என்னுந் தொகையினராகி இப்பொழுது பூதத் துக்கு இரையாகப் போகின் ருேம் என மனம் நொந்து கூறிஞர்கள். அவர்களது துயர்க்கு இரங்கிய நக்கீசர், தமிழ்த் தெய்வமாகிய முருகப் பெரும னை நினைந்து திருமுருகாற்றுப் படையென்னும் செழும்பாடலைப் பாடிப் போற்றினர். செந்தமிழ்ச் சுவையில் விருப்புற்ற அறுமுகச் செவ்வேள், வேலேந்தி நீலமயில் மீதேறி நக்கீரர் முன்னே வந்து தோன்றிப் பூதத்தையழித்து நக்கீரரையும் ஏனையோரையும் சிறையினின்றும் விடுவித்தருளினர். நக்கீரன் தம்துயர்தீர்த்தருளிய முருகப்பெருமான யிறைஞ்சி