பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவனைக் காதலித்த தலைவி கிளி குயில் என்பவற்றை நோக்கி இறைவனது திருநாமத்தைக் கூறியழைக்கும்படி வேண்டும் பகுதி திருவாசகத்திலுள்ள குயிற்பத்து திருத்தசாங்கம் முதலிய பகுதிகளை நினைவு படுத்துவதாகும். தூயவெள்ளை நிறம் வாய்ந்த இளங் குருகே, நீ ஒருபால் கூசித் தங்கியிருக்கின்ருய். கயிலைப் பெருமானது திறம் நினைந்து வருந்தும் எம்மைப் போல் நீயும் அப்பெருமானைக் காமுற்றனையோ’’ எனக் குருகை நோக்கியும், கருங்கடலே, உலக வுயிர்களெல்லாம் கண்ணுறங்கும் இருள் நிறைந்த ந ள் வளி ர வி லு ம் நீ துயிலாது அலமருகின்ருய். நீயும் எம்மைப்போல் காளத்தியிறைவனைக் காமுற்றனையே எனக் கடலை நோக்கியும் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்களும், மேகத்தை நோக்கியும் இளம்பிறையை நோக்கியும் இறைவன்பால் தனது ஆற்ருமையைத் தெரிவிக்கும்படி தலைவி குறையிரந்து வேண்டுவதாக அமைந்த பாடல்களும் படிப்போருள் ளத்தை உருக்குவனவாகும். கயிலைபாதி காளத்திபாதி யந்தாதியாகிய இப்பனுவலே இடைவிடாது பயில் வோர் இறைவனது திருவருள் நலத்தினை உள்ள வாறு உணர்ந்து இன்புறுவரென்பது திண்ணம்.

2. திருவீங்கோய்மலையெழுபது

திருவீங்கோய்மலையிற் கோயில் கொண்டருளிய சிவ பெருமானைப் போற்றிப் பரவிய எழுபது வெண்பாக்களே யுடையதோர் பிரபந்தமாதலின் இது திருஈங்கோய்மலை யெழுபது எனப்பெயர்பெறுவதாயிற்று. சங்கத்துச் சான் ருேரால் தொகுக்கப்பெற்ற பண்டைத் தொகை நூல்களின் பாடறருெகையினை அடியொற்றிப் பிற்காலத்துப பல்வேறு பிரபந்தங்கள் தோன்றி வழங்குவனவாயின. முன்னையோர் அன்பினைந்தினைபற்றிய அகவற்பாக்களை அடிவரையறை கருதி நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றின நானூறு என நானூறு நானூறு பாக்களாகத் தொகுத்த முறையினை உளங் கொண்ட பிற்காலப் புலவர்கள், அகன ந்திணை பற்றித் தாம் பாடக்கருதிய அகப் பொருட் கோவையின நானூறு துறைகளமைய இயற்றுவா சாயினர். நூற்றைம்பது கலி யென வழங்கும் கலித் தொகைப் பாடற்ருெகையினை அடியொற்றி அத்தொகை