பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642

பன்னிரு திருமுறை வரலாறு


குறவர் கொணர்ந்த தேனெடு கலந்து விருந்தினர்க்கு அளித்துச் சுற்றத்தாரொடு உண்டு மகிழ்தலும், சுனை நீராடி நறவுண்டு மகிழ்ந்து தம் நிலத் தெய்வத்தைப் பாடிக் குரவையாடுதலும் ஆகிய செய்திகள் இந்நூலிற் சுவை

பெருக விளக்கப் பெற்றுள்ளன.

சந்தனமுந் தண்பலவும் கொன்றையும் கோங்கமுந் தேக்கும் வேங்கையும் வாழையும் மாவும் மூங்கிலும் எழில் பெற வளர்ந்தோங்கிய சாரலையும், தேறுை பாய்ந்து தித்திக்குந் தாமரைத் தண் சுனையினையும், கார்க்கொடி முல்லை மலர்ந்த கள்ளொழுகு முல்லைப்புறவத்தினையும், தியென மலர்ந்த செங்காந்தட் பூக்களையும் தன்பாற் கொண்டு திகழும் ஈங்கோய்மலையின் இயற்கை வனப்பினை நக்கீர தேவர் இந்நூலிற் சொல்லோவியஞ் செய்து காட்டு கின்ருர். இயற்கை வனப்பிலே தெய்வவனப்பினைக்கண்டு மகிழுந்திறம் புலமை நிரம்பிய மெய்யடியார்கள்பால் மிக்குத் திகழ்வதாகும். ஈங்கோய்மலையில் எழுந்தருளிய இறைவனைப் போற்றக் கருதிய இந்நூலாசிரியர், தாம் பாடிய வெண்பாக்களில் ஈங்கோய்மலையின் இயற்கை யழகினே முதல் மூன்றடிகளாலும் அங்கு எழுந்தருளிய இறைவனது பேரருட்டிறத்தை இறுதியடியாலும் விளக்கிப் போற்றுதலை முறையாகக் கொண்டுள்ளார். இவர் பாடிய பாடல்கள் யாவும் படிப்போரை இயற்கை வனப்பின லீர்த்துத் தெய்வ வனப்பில் திளைக்கச் செய்யும் செம்மை நலமுடையனவாய்த் திகழ்கின்றன.

சிவபெருமான், ஓங்காரமாகிய பிரணவ உருவாய் விளங்குதலும், எல்லாவுயிர்களுக்குந் தோன்ருத் துணை பாய் நின்று அவ்வுயிர்களுக்கு நேருந் துன்பங்களை நீக்கி அருள் புரிதலும், தன்னை அன்பினுல் வழிபடும் அடியார்களை வினைத்துன்பம் சாராதபடி பாதுகாத்து, மனக்கவலை தீர்த்து அருள் செய்தலும், உயிர்களுக்கு நலஞ்செய்தற் பொருட்டு வேதமும் கலைகளும் அருளிச் செய்தலும் ஆகிய திருவருட் பண்புகளை இந்நூலாசிரியர் உளமுருகிப் போற்றுகின்ருர். சிவபெருமான் மேருமலையை வில்லாக வனத்துத் திரிபுரமெரித்தமை, அடியவர்க்காகக் கூற்று வன உதைத்தமை, காமனைக் காய்ந்தமை, திங்களைச் சடையிலணிந்து தேயாமற் பாதுகாத்தமை, பெருகிவருங்