பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 53

கங்கை வெள்ளத்தைத் தன் செஞ்சடையிற் கரந் தருளினமை, ஆலின் கீழமர்ந்து அறமுதல் நாற் பொருள் களை முனிவர்களுக்கு அருளிச் செய்தமை, சாவாமைக்குக் காரணமாகிய அமுதத்தை வேண்டித் தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்த நிலையில் அங்குத் தோன்றிய ஆல கால நஞ்சினைக் கண்டு நடுங்கிச் சரணடைந்த அவர்களை உய்வித்தல் வேண்டி அந்நஞ்சினையுண்டு மிடற்றி லடக்கித் திருநீலகண்டகைத் திகழ்ந்தமை, திருமாலுந் தேடொளு நிலையில் நின்றமை முதலிய சிவபுராணங்களை நக்கீர தேவர் இப்பிரபந்தத்தில் நயம்பெற எடுத்துரைத்

துள்ளார்.

அடியார்களை வினைத்துன்பம் சாராவண்ணம் பாது காக்கும் இறைவனது அருட் சிறப்பினை நம்மேல் மறுதலை நோய் தீர்ப்பான் , நம்மேல் வரலா நோய் தீர்ப்பான்

நந்தம் வினைக் குவால் வீட்டுவிப்பான் , எவ்வுயிர்க்கும் வாட்டங்கள் தீர்ப்பான் ' என இந்நூலாசிரியர் பலபடி யாகப் பாராட்டுகின்ருர். கடவுள் வழிபாட்டினல் வினைத் துன்பங்கள் அறவே ஒழிந்துபோம் என்னுந் திட்ட வுணர் வினை இவ்வாசிரியர் தெளிவிக்கும் முறை,

ஒருவரைடியாரை ஊழ்வினை நலியவொட்டாரே !

செய்வினே வந்தெ மைத் தீண்டப்பெரு திருநீலகண்டம் என ஆளுடைய பிள்ளையாரும், அல்லலென்செயும் அரு வினை யென்செயும், தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும், தில்லை.மாநகர்ச் சிற்றம் பலவளுர்க், கெல்லை யில்லதோரடிமை பூண்டேனுக்கே என ஆளுடைய அரசும் அறிவுறுத்திய பொருளுரைகளை நினைவுபடுத்துவதாகும்.

மன வுணர்வுடைய மக்களின் ஒழுகலாறுகளை வரம் பாகக்கொண்டு அஃறிணையுயிர்களாகிய விலங்கு பறவை முதலியவற்றின் செயற்றிறங்களை ஒப்புநோக்குங் குறிப் புடன் நக்கீரதேவர் புனைந்துரைக்கும் பகுதிகள் மிகவும் சுவையுடையனவாம். அஃறிணை யுயிர்களில் மக்களை யொத்த உடலமைப்பும், அவர்கள் செய்வனவற்றைப் பார்த்திருந்து அவ்வாறே தாமும் செய்ய முயலும் ஒத்த செயலும் உடையன குரங்குகளேயாகும். இத்தகைய குரங்கின் இயல்பினை நக்கீர தேவர் விரித்துரைக்குந் திறம் பெரிதும் நயமுடையதாகும்.