பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பன்னிரு திருமுறை வரலாறு


குறித்து வழங்கும் இப்பெயர்கள் பிற்காலத்தில் நூலாசிரியர் புனைந்து வழங்கிய சிறப்புடைய காரணப்பெயர்களெனவே கொள்ளத்தக்கன.

நம்பியாண்டார் நம்பி திருவாதவூரடிகளைத் திருவாத ஆர்ச் சிவபாத்தியன் எனச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். யாவராலும் அறியொளு முதலாய ஆனந்த மூர்த்தியாகிய இறைவனே திருப்பெருந்துறையிற் குருவாக எழுந்தருளி வந்து வாதவூரர்தம் சென்னிமிசைத் திருவடி சூட்டி ஆட் கொண்டு மெய்ப்பொருளை உபதேசித்தருளினுன் என்பது வரலாறு. இவ்வாறு குருவாக எழுந்தருளிவந்து தம்மை ஆட்கொண்டருளிய இறைவனது பெருங்கருனைத்திறத்தை நினைந்து நெஞ்சங்கரைந்துருகிய திருவாதவூரடிகள், தம்மை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய திருவடிகளை எக் காலத்தும் தம் சென்னியிற்கொண்டு போற்றும் செம்புலச் செல்வராய்த் திகழ்ந்தனராதலால் சிவனடி சென்னிவைத்த வர் ' என்ற பொருளில் திருவாதவூர்ச் சிவபாத்தியன் என்ற சிறப்புப் பெயரால் போற்றப் பெற்றனர். எனினும் அடிகளுக்குப் பெற்ருேர் இட்டு வழங்கிய இளம் பருவப் பெயர் திருவாதவூரர் என்பதேயாகும். இச்செய்தி, நாமம் இன்னெறி வாதவூரர் என்ன வந்துதயஞ்செய்தார் எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பியும். பேர்வாதவூரரெனப் பெற்று எனப் பரஞ்சோதி முனிவரும், திருவாதவூரரெனுந் திருநாமந்தரித்தார்கள் எனக்கடவுள் மாமுனிவரும் கூறு மாற்ருல் இனிது விளங்கும். ஆருரம் என்ற பெயர், திருவாரூரிற் கோயில் கொண்டருளிய சிவபெருமானுக்குரிய பெயராய்ப் பின்பு திருநாவலூரில் தோன்றிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குரிய பெயராக இடப்பெற்று வழங்கினமை போன்று, திருவாதவூரர் ' என்ற இப்பெயரும் திருவாதவூர் என்னும் தலத்திற் கோயில்கொண்டருளிய சிவபெருமானுக் குரிய திருப்பெயராய், அடிகளுக்குப் பெற்ருேரால் இடப் பெற்று வழங்கியதெனக் கருதுதல் பொருந்தும்.

திருவாதவூரடிகளுக்குத் திருவாதவூரர் என்ற பெயரைக் காட்டிலும் மாணிக்கவாசகர் என்ற பெயரே இக்காலத்திற் பெருக வழங்கக் காண்கிருேம். மாணிக்கவாசகர் எனவழங்கும் இப்பெயர்க் காரணத்தைச் சிந்தித்து ஆராய்தல் வேண்டும். திருப்பெருந்துறையிற் குருவாக எழுந்தருளிய சிவ