பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646

பன்னிரு திருமுறை வரலாறு


கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னடன் நீப்பனே அல்லன் "

என வரும் யாப்பருங்கல விருத்தி மேற்கோட் செய்யுளில் மேற்குறித்த முதுமந்தியின் செயல் மேலுந் திருத்தம் பெறக் காண்கின்ருேம். நக்கீரதேவர் பாடலிற் குறிக்கப் படும் மந்தி செங்காந்தள் மலரிற் படிந்த வண்டினைக்கண்டு தீயில் வீழ்ந்து வருந்துவதாக மருண்டு செய்வதறியாது மனந் துணுக்குற்றுக் கைகளே நெறித்துக் கொள்கிறது. குழலிசைய எனத் தொடங்கும் பாடலிற் குறிக்கப்பெற்ற மந்தி அதே காட்சியைக் கண்டு வருந்தியதாயினும், தீயிணைத் தண்ணீரால் அவித்து விடலாமெனத் தெரிந்து விரைந்து அருவி நீரைக் கைகளால் முகந்து அத்தீயினை அணைக்க முயலுந் தெளிவு பெற்றுத் திகழ்வதைக் காண் கின்ருேம். நக்கீர தேவர் பாடலிற் குறித்த குரங்கின் செயல் அஃறிணை யுயிர்களின் இயற்கைக்கு ஒத்த தன்மை நவிற்சி யாகவும், யாப்பருங்கல மேற்கோட் செய்யுளிற் குறித்த குரங்கின் செயல் அதன் இயற்கை யறிவுக்கு மேற்பட்டுத் தோற்றும் உயர்வு நவிற்சியாகவும் விளங்குதலை நோக்குங் கால் முன்னர்க் காட்டிய நக்கீரதேவர் பாடலே பின் தோன் றிய யாப்பருங்கல விருத்தி மேற்கோட்செய்யுளுக்கு நிலைக்களமாக அமைந்ததென்பது நன்கு துணியப்படும்.

தன் இனத்தைப் பாதுகாக்குந் தொழிலில் மக்களைப் போன்று நல்லறிவு பெற்றுத் திகழும் விலங்கு குறிஞ்சி நிலத்திற்குச் சிறப்புரிமையுடைய யானையாகும். யானை யைக் குறித்து ஈங்கோய்மலை யெழுபதிற் கூறப்படுஞ் செய்திகளை ஒரு சிறிது நோக்குவோம்.

பிடியின்பாற் காதல்கூர்ந்த களிருென்று, காற்றின்றி வருந்தும் தனது பிடியின் வருத்தத்தைத் தணித்தல் கருதித் தனது நீண்ட கையில்ை மாக்கிளைகளை முறித்து அவற் றின் தழைகளால் வீச, அப்பெண் யானை மென்காற்றினை யேற்று உலவி மகிழும் காதல் நிலை ஈங்கோய்மலை யெழு பதின் 25-ஆம் பாடலில் விளக்கப்பெறுகின்றது. மலை வாணர்கள் தாம் விதைத்த தினைக்கொல்லையில் யானைகள் புகுந்து உழக்காதபடி அக்கொல்லேயின் ஒரமாக அமைந்த வழியிடையே பெரிய குழிகளை வெட்டி அவற்றைத் தழை களால் முடி மறைத்தல் வழக்கம். ஒருமுறை அவர்களது