பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648

பன்னிரு திருமுறை வரலாறு


காந்தளங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன் கொடுக்கும் ஈங்கோயே

செஞ்சடைமேற் கார்க் கொன்றை யேற்ருன் கடறு, எனவரும் பாடலால் ஆசிரியர் புலப்படுத்துகின்ருர்.

வரைசேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட வண்டுபாட விரை சேர் பொன் இதழி தர மென்காந்தள் கையேற்கும்

மிழலையாமே

என வரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடலிற் குறிக்கப் பட்ட அழகிய காட்சியை நக்கீர தேவர் மேற்காட்டிய பாடலிற் புலப்படுத்தியுள்ளமை உணர்ந்து இன்புற த் தக்கதாகும்,

இலைகளெலாம் உதிர்ந்த நிலையில் தீப்போலும் செந்

நிற மலர்களைப் பூத்து விளங்கும் முள்ளிலவ மரத்தின்மேல் ஏறிய மயில், அப்பூக்களின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நடுங்காது அப்பூக்களின் நடுவே அமைதியாக அமர்ந் திருக்கின்றது. இவ்வழகிய தோற்றம், தன் ஆருயிர்க் கணவன் இறந்தாகை அவனது பிரிவாற்ருது உயிர் விடக் கருதிய கற்புடை மங்கையொருத்தி பெருந்தீயினை வளர்த்து அதன் நடுவே அச்சமின்றியமர்ந்து உயிர்விடும் நிலையினை யொத்து விளங்குகின்றது. இவ்வழகிய காட்சியை,

முள்ளார்ந்த வெள்ளிலவ மேறி வெறியாது

கள்ளார்ந்த பூப்படியுங் கார் மயில்தான்-ஒள்ள ர்

எரிநடுவுட் பெண் கொடியா ரேய்க்கும் ஈங்கோயே

புரிநெடு நூல் மார்பன் பொருப்பு.

என்ற பாடலால் ஆசிரியர் அழகுபெற எழுதிக்காட்டு கின்ருர். இப்பாடல் ஐங்குறு நூற்றின் ஏட்டுச் சுவடியிற் காணப்பட்ட,

உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை இலவ மேறிய கலவ மஞ்ஞை, எரிபுகு மகளி ரேய்க்கும் அரில்படு கள்ளியங் காடிறந்தோரே

என்ற பழம் பாடலே முழுவதும் அடியொற்றியதாக அமைந்

திருத்தல் காணலாம். இலவமரத்திற் பூத்துள்ள சிவந்த பூக்களிடையே அமர்ந்த மயிலின் இயற்கை வனப்பாகிய