பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயகுர் 663

சோர்வுற்றமையால் தவறுசெய்தே னுயினேன். நினது அருளாணைக்கு மாறுபட நடந்த எளியேன் பாற் கொண்ட சினத்தை யொழித்து அடியேற்கு அருள் செய்வாயாக. இதுவே உயிர்கள்பாற் பேரிரக் கமுடையணுகிய நினது அருளின் நீர்மையைப் புலப்படுத் துவதாகும் என இறைவனைப் பரிந்து வேண்டுவது இத் திருப்பாட்டாதலின் இதுவும் நக்கீரதேவர் வாக்கே யெனக் கொள்வது ஏற்புடையதாகும்.

கோபப் பிரசாதம்

வேண்டுதல் வேண்டாமையிலான கிய சிவபெருமான் தன் திருவருளாணை வழி நில்லாத தீ யோரைக் கோபித்தும் தனது அருள் வழியொழுகும் நல்லோரைக் காத்தும் மன்னுயிர்களின் நலங்கருதிச் செய்தருளிய தெறலும் அளியுமாகிய இருவகைச் செய்திகளையும் அடுத்தடுத்து எடுத்துரைப்பது நக்கீரதேவர் பாடிய கோபப் பிரசாதம் என்னும் பிரபந்தமாகும். இது தொண்ணுாற்ருென்பது அடிகளால் இயன்ற ஆசிரியப்பாவாகும். இதன் கண் இறைவன் அவ்வக்காலந்தோறும் செய்தருளிய அளியும் தெறலுமாகிய செய்திகள் பலவற்றைக் குறிப்பிட்டு இன்னவை பிறவும் எங்களிசன் கோபப் பிரசாதம் என நக்கீரதேவர் கூறுதலால் இப்பாட்டிற்கு அவ்வாசிரியர் இட்ட பெயர் கோபப் பிரசாதம்' என்பது நன்கு புலஞ கின்றது. ஈண்டுக் கோபம் என்றது. வெகுளியின் விளை வாகிய ஒறுத்தற் ருெழிலையும் பிரசாதம் என்றது அருளின் விளைவு ஆகிய அளித்தற்ருெழிலையும் உண்ர்த்துதல் 篮醇”破馆岛。

தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தாரைக் காப்பது தலையாய பெருமக்களது கடமையாதலானும், தன் ஆனே வழியடங்காத கொடியோரை ஒறுத்தல் வேந்தனது முறைமையாகலானும் எவ்வுயிர்க்குந் தலைவனுகிய இறைவனும் தன் பால் அன்புடையராய் அருளானவழி அடங்கியொழுகும் மெய்யடியார்களைக் காத்தலும் அருள் ஆணைவழியொழுகாத தீயோரைச் சினந்து ஒறுத்தலும் ஆகிய இவ்விரு தொழில்களையும் தனக்குரிய கடமையும் முறைமையுமாக மேற்கொண்டுள்ளான். அளியுந் தெறலு மாகிய இத்தொழில்களை இறைவன் மேற்கொள்ளுதற்குக்