பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్షిశ్రీ பன்னிரு திருமுறை வரலாறு

தாக்கிக் கொல்லும் புலிகள் உறு மும் மலையிடையமைந்த காடு. அவன் வளர்ப்பது, சிவந்த கண்களையுடைய வேட்டை நாயொடு விலங்குகளைப் பிடிப்பதற்காகப் பழக்கப்பட்ட பார்வை மிருகங்களே. அவன் பயின்ற கல்வியோ வில் வேல் வாள் முதலிய படைக்கலப் பயிற்சி. வேட்டத்தாற் கொன்ற விலங்குகளை யறுத்த தசைத் துண்டங்கள் நிரம்பப் பெற்றுக் குருதி நீர் நிறைந்த குடங் களையும் குருதிக் கறைபடிந்த படைக்கலங்களையும் உடைய தாய்ப் புல்லும் மயிற் பீலியும் வேயப்பெற்ற மேற்கூரை பிரிந்த நிலையிற் காணப்படும் வெளியிடமே அவன் தங்கி யிருக்கும் மனையாகும். புலித்தோலும் வாரும் தனக்குரிய உடையும் கச்சுமாக விளங்க, இரவும் பகலும் நீங்காத முயற்சியோடு வில்லிற் கோத்து எய்யப்படும் அம்பினுலும் திண்ணிய குற்றுடை வாளிலுைம் விலங்குகள் பலவற்றை இனத்தொடும் பதை பதைப்பக் கொல்லுதலே அவன் மேற்கொண்ட தொழிலாகும். அவனது வடிவோ, வீர மிக்க புலியாற் கடிக்கப் பெற்ற நிலையில் வடுவடைந்த வலிய முன் கையும் மாற்ருர் எய்த படைக்கலங்களாற் போழப்பட்ட நிலையில் வடுப்பெற்று விளங்கும் திண்ணிய மலையனை ய மார்பும் கூரிய பற்களையுடைய கரடியைப் பற்றியதால் வடுவடைந்த நெற்றியும் வலிய தந்தத்தை யுடைய பன்றியைப் பற்றிப் படுத்தமையால் வடுப்பட்ட தொடையும் செடிகளின் புதரெனத் திகழும் செங்குஞ்சியும் சிவந்த கண்களும் இடியென வியம்பும் வெஞ்சோற்களைப் பேசும் வாயும், கரு நிறமும் கொல்லும் படைக்கலங்களைத் தாங்கும் பெருவன்மையும் உடையதாய்த் திகழ்வதாகும். அவனது மனமோ வேட்டத்தால் விலங்குகளைக் கொல்லுந் தொழிலில் வேட்கையுடையதாய்த் தன்பால் அகப்பட்ட உயிர்கள்படுந் துன்பத்தைக் கண்டு மகிழும் இயல்பின தாகும். இதுவே அக் கானவர் தலைவனகிய வேடனது இயல்பு.

தாய்ப் பசுவினிடத்து ஆர்வத்தால் விரைந்து செல்லும் இளங்கன்றினைப் போன்று மலைமகள் பங்களுகிய சிவபெரு மான்பால் விரைந்து சென்று அவ்விறைவனுடைய திருவடி களை இறைஞ்சிப் பூசனை செய்த பின்பு உண்பதல்லது அவ் வழிபாட்டிற்கு முன்னர் உணவு கொள்ளும் வழக்கத்தினை அறியாதவன் அவ் வேடுவன். தீப்பிழம்பெனக் கடுவெயில்